“ஆசிரியர், அதிபர்கள் பாடசாலைக்கு சமுகமளிக்காவிட்டால் கடும் நடவடிக்கை : போராட்டத்தில் ஈடுபட்டால் கைது ”


(இராஜதுரை ஹஷான்)

ஆசிரியர் மற்றும் அதிபர்கள் எதிர்வரும் 21ஆம் திகதி பாடசாலைக்கு சமுகமளிக்காவிட்டால் கடுமையான நடவடிக்கை முன்னெடுக்கப்படும்.பாடசாலைக்கு முன் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுப்படுவர்களை கைது செய்ய ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாடும் தொழிற்சங்கங்களின் அழுத்தங்களுக்கு ஒருபோதும் அடிபணிய முடியாது.என காணி விவகார அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்தார்.

Articles Tagged Under: எஸ்.எம்.சந்திரசேன | Virakesari.lk

 அநுராதபுரம் பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அக்கூட்டத்தில் அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

ஆசிரியர்-அதிபர் போராட்டம் பாரிய விளைவுகளை ஏற்படுத்தும்,தொழிற்சங்கததினர் முன்வைத்த கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்க அரசாங்கம் பொறுப்புடன் யோசனைகளை முன்வைத்துள்ளது. கொவிட் தாக்கத்திற்கு மத்தியில் சம்பள அதிகரிப்பிற்கு அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.

தொழிற்சங்க போராட்டம் இன்று அரசியல் மாற்றத்திற்கான போராட்டத்தை நோக்கி நகர்வதை தொழிற்சங்கத்தின் ஒரு சில தலைவர்களின் செயற்பாடுகளின் ஊடாக விளங்கிக் கொள்ள முடிகிறது.எவ்விதத்தில் தீர்வு வழங்கினாலும் அதனை ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் ஆசிரியர்-அதிபர் தொழிற்சங்கத்தினர் இல்லை.இவர்களின் முறையற்ற செயற்பாடுகளினால் பாரிய விளைவு ஏற்பட போகிறது.

கொவிட்-19 வைரஸ் தொற்று பரவல் குறைவடைந்துள்ளதை தொடர்ந்து எதிர்வரும் 21ஆம் திகதி பாடசாலைகளை முதற்கட்டமாக திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் பாடசாலைக்கு செல்ல தயாராக இருந்தாலும் ஒரு சில தொழிற்சங்கத்தினர் அதற்கு தடையாக உள்ளார்கள்.

ஆசிரியர்,அதிபர்கள் பாடசாலைக்கு செல்வதை கட்டாயமாக தடுக்கும் உரிமை தொழிற்சங்கத்தினருக்கு கிடையாது. 21ஆம் திகதி அனைத்து பாடசாலைகளின் முன்பாகவும் பாதுகாப்பு தரப்பில் சேவையில் ஈடுப்படுத்தப்படுவார்கள். பாடசாலைக்கு முன்பாக தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுப்படுபவர்களை கைது செய்ய ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.வடமத்திய குழு கூட்டத்தில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

வடமத்திய மாகாணத்தில் 18 ஆயிரம் பட்டதாரிகள் ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.இவர்கள் எதிர்வரும் 21ஆம் திகதி பாடசாலைக்கு சமூகமளிக்காவிட்டால் அவர்களுக்கு எதிரான நடவடிக்கை முன்னெடுக்கப்படும்.அத்துடன் பாடசாலை வெளிகள ஊழியர்களும் சேவைக்கு வருகை தர வேண்டும்.

 எதிர்வரும் 21ஆம் திகதி பாடசாலைகளை திறத்தல்,ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் பாடசாலைக்கு வருதல் குறித்து ஆளுநர்கள் விசேட அவதானம் செலுத்துவார்கள்.மாணவர்களின் எதிர்காலத்தை விளையாட்டாக பயன்படுத்திக் கொள்ளும் தொழிற்சங்கத்தினரது அழுத்தங்களுக்கு ஒருபோதும் அடிபணிய முடியாது.என்றார்.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

இலங்கையின் பிரிஸ்டல் தெருவில் உள்ள ஒரு கட்டிடத்தில் 205 உயிருள்ள வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன - இலங்கை சமீபத்திய பிரேக்கிங் நியூஸ்

Thu Oct 14 , 2021
கொழும்பு பிரிஸ்டல் தெருவில் உள்ள ஐந்து மாடி கட்டிடத்தில் உள்ள ஒரு கழிப்பறையில் 205 வெடிமருந்துகளை இலங்கை காவல்துறை இன்று (14) மீட்டுள்ளது. ஆதாரங்களின்படி, கொழும்பு கோட்டை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் வெடிமருந்து கண்டுபிடிக்கப்பட்டது. 176 டி -56 வெடிமருந்துகள் மற்றும் 29 9 மிமீ உயிருள்ள வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். கட்டிடத்தில் பணிபுரியும் ஒரு துப்புரவு தொழிலாளி தோட்டாக்கள் இருப்பை பார்த்ததாக கூறப்படுகிறது. கொழும்பு குற்றப் […]

You May Like

Breaking News

Translate »