ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாய் சுட்டுக்கொலை | Virakesari.lk


(எம்.எப்.எம்.பஸீர்)

காலி, ஹபராதுவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹீனெட்டிகல – ஹெடிதெமலகந்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற அடையாளம் தெரியாத நபர்கள் முன்னெடுத்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கொள்ளை : தடுக்க முற்பட்ட ஊழியர் சுட்டுக்கொலை  ! | Virakesari.lk

46 வயதான சிசிர குமார எனும்  ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாய் ஒருவரே இதன்போது கொல்லப்பட்டுள்ளார்.

வட்டிக்கு பணம் கொடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடும் 3 பிள்ளைகளின் தந்தையான குறித்த முன்னாள் இராணுவ சிப்பாய்,  வட்டிக்கு பணம் பெற்ற ஒருவர்  சரியாக அதனை மீளச் செலுத்தாததால் சுவீகாரமான காணியை சுத்தம் செய்துகொண்டிருந்த போது இந்த துப்பாக்கிச் சூடு நடாத்தப்பட்டுள்ளது.

துப்பக்கிச் சூட்டினை நடத்தியோர் மோட்டர் சைக்கிளில் வந்ததாக தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை ஹபராதுவ பொலிசார் ஆரம்பித்துள்ளனர். 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

இந்திய இராணுவத் தளபதி பாதுகாப்புச் செயலாளரை சந்தித்தார்

Thu Oct 14 , 2021
இந்திய இராணுவத்தின் இராணுவத் தளபதி (சிஓஏஎஸ்) ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவனே ஒரு இராணுவக் குழுவுடன் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை (ஓய்வு) அமைச்சகத்தில் (அக்டோபர் 13) சந்தித்தார். இந்த சந்திப்பின் போது பாதுகாப்புச் செயலாளரும் வருகை தரும் இந்திய இராணுவத் தளபதியும் இருதரப்பு உறவுகள் மற்றும் இராணுவப் பயிற்சி குறித்து அன்பான கலந்துரையாடல்களை மேற்கொண்டனர். பாதுகாப்பு அமைச்சின் இராணுவ தொடர்பு அதிகாரி மேஜர் ஜெனரல் தினேஷ் நாணயக்காரவும் […]

You May Like

Breaking News

Translate »