மட்டக்களப்பு கடலில் வலையில் சிக்கிய துப்பாக்கி


மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுவிற்குட்பட்ட கல்லடி திருச்செந்தூர் பகுதியில் நேற்று புதன்கிழமை (13) மீனவர்கள் கரைவலையைப் பயன்படுத்தி மீன்பிடியில்  ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது வலை கரைக்கு வந்ததும் மீன்களுடன் துப்பாக்கியொன்றும் கடலிலிருந்து அகப்பட்டிருப்பதை அவதானித்த மீனவர்கள் பொலிசாருக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.

குறித்த  துப்பாக்கியானது கல்லடி திருச்செந்தூர் சுனாமி நினைவு தூபிக்கு பின் பகுதியில் உள்ள கடற்கரை பகுதியில் மீன் பிடியில் ஈடுபட்டிருந்த மீனவர்களின் கரை வலையிலேயே அகப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார் துப்பாக்கியை மீட்டுள்ளதுடன் மீட்கப்பட்ட துப்பாக்கி  ரி56 ரக துப்பாக்கியென இனங்கண்டுள்ளதுடன் காத்தான்குடி பொலிஸ் நிலையத்திற்கு குறித்த துப்பாக்கியினை எடுத்துச் சென்றுள்ளனர்.

குறித்த துப்பாக்கி தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன் குற்றச்செயல்களுடன் ஈடுபட்ட எவரேனும் கடலில் வீசிவிட்டு சென்றிருக்கலாமென சந்தேகிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

இன்று வரை 527 புதிய நேர்மறை வழக்குகள் பதிவாகியுள்ளன

Thu Oct 14 , 2021
இன்று (அக்டோபர் 14) இதுவரை 527 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இது நாட்டில் பதிவான மொத்த கோவிட் -19 வழக்குகளின் எண்ணிக்கை 529,608 ஆக உள்ளது. 24,500 க்கும் மேற்பட்ட வைரஸ் பாதிப்புக்குள்ளான நோயாளிகள் தற்போது மருத்துவமனைகள், சிகிச்சை மையங்கள் மற்றும் வீட்டு அடிப்படையிலான கவனிப்பில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று அதிகாலை 366 நோயாளிகள் மருத்துவ […]

You May Like

Breaking News

Translate »