வெள்ளைப்பூடு விவகாரம் ; சதொச பிரதிப் பொது முகாமையாளர் உட்பட நால்வருக்கு பிணை


லங்கா சதொசாவில் இடம்பெற்ற வெள்ளைப்பூடு மோசடிக்கு உதவியதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட அதன் நான்கு ஊழியர்களும் இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் இன்றைய தினம் வத்தளை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணை வழங்கப்பட்டுள்ளது.

லங்கா சதொச நிறுவனத்தின் பிரதிப் பொது முகாமையளர், சிரேஷ்ட விநியோக முகாமையாளர், விநியோக முகாமையாளர், மொத்த விற்பனை முகாமையாளர் ஆகிய நால்வரே கடந்த 11 ஆம் திகதி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக லங்கா சதொச நிதி பிரிவின் பிரதிப் பொது முகாமையாளர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக லங்கா சதொச நிதி பிரிவின் பிரதிப் பொது முகாமையாளர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

லங்கா சதொச நிறுவனத்திற்கு சொந்தமான 54,000 கிலோ கிராம் வெள்ளைப்பூட்டை மூன்றாம் தரப்பிற்கு குறைந்த விலைக்கு விற்று, மீண்டும் அதனை கூடிய விலையில் கொள்வனவு செய்வதற்கு முயற்சி செய்ததாக தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை ஆரம்பத்தில் பேலியகொடை விசேட குற்ற விசாரணைப் பிரிவினர் மேற்கொண்டு வந்த நிலையில், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவின் உத்தரவுக்கமைய, அது CID யிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.

இது தொடர்பில் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கும் தொடர்பு இருப்பதாக எதிர்க்கட்சி குற்றம் சாட்டி வரும் நிலையில், அதனை நிரூபித்தால் தான் பதவி விலகுவதாக அமைச்சர் பந்துல குணவர்தனவும் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

இலங்கையில் நம்பர் போர்ட்டபிலிட்டிக்கு சட்ட ஒப்புதல் வழங்கப்பட்டது

Thu Oct 14 , 2021
எண் போர்ட்டபிலிட்டி சேவைக்கு இலங்கை சட்டப்பூர்வ ஒப்புதல் அளித்துள்ளது என்று ஒசடா சேனாநாயக்க அறிவித்தார். அனைத்து சந்தாதாரர்களுடனும் ஒரு மைய தரவுத்தளத்தை உருவாக்க இந்த வார தொடக்கத்தில் அனைத்து சேவை வழங்குநர்களுக்கும் அறிவிக்கப்பட்டது என்று அவர் கூறினார். “எண்ணை வரைபடமாக்க மத்திய தரவுத்தளம் தேவை, நாங்கள் மற்ற நாடுகளிலிருந்து இந்த செயல்முறையைப் படித்திருக்கிறோம்,” என்று அவர் கூறினார். அனைத்து தொழில்நுட்ப அம்சங்களும் நிறைவடையும் போது, ​​எண் 2022 மே முதல் […]

You May Like

Breaking News

Translate »