பப்புவா நியூ கினியாவுடனா ஆட்டத்தில் 162 ஓட்டங்களை குவித்த இலங்கை


ஒக்டோபர் 17 ஆம் திகதி முதல் ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஓமானில் நடைபெறவுள்ள டி-20 உலகக் கிண்ணத்துக்கான பயிற்சிப் போட்டியில் இலங்கை அணி பப்புவா நியூ கினியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 162 ஓட்டங்களை குவித்துள்ளது.

May be an image of one or more people, people playing sports and text

இரு அணிகளுக்கும் இடையிலான பயிற்சிப் போட்டி இன்று காலை அபுதாபி டொலரன்ஸ் ஓவல் மைதானத்தில் ஆரம்பமானது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 162 ஓட்டங்களை குவித்துள்ளது.

இலங்கை அணி சார்பில் அதிகபடியாக பதும் நிஷாங்க 73 ஓட்டங்களையும், அவிஷ்க பெர்னாண்டோ 61 ஓட்டங்களையும் பெற்று, ஆட்டமிழக்காதிருந்தனர்.

163 என்ற வெற்றியிலக்கை நோக்கி பப்புவா நியூ கினியா அணி சற்று நேரத்தில் பதிலுக்கு துடுப்பெடுத்தாட ஆரம்பிக்கும்.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

எஃப்எம்ஆர். இந்தியப் பிரதமரின் உடல்நிலை சீராக உள்ளது

Thu Oct 14 , 2021
முன்னாள் பிரதமர் – டாக்டர் மன்மோகன் சிங்கின் உடல்நிலை சீராக இருப்பதாக அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் (எய்ம்ஸ்) மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். டாக்டர் சிங் (89), டெல்லியில் காய்ச்சல் மதிப்பீட்டிற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், அவர் செவ்வாய்க்கிழமை முதல் புகார் செய்தார். அவர் தற்போது மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார். Source link

You May Like

Breaking News

Translate »