எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலை அகற்றும் நிறுவனம் தொடர்பில் இன்று அறிவிப்பு


எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் மற்றும் அதில் தீப்பற்றலுக்கு உள்ளான கொள்கலன்களை அகற்றுவதற்கான கேள்விப்பத்திரம் தொடர்பான தகவல்களை அதனுடன் தொடர்புடைய நிறுவனம் இன்றைய தினம் தமக்கு அறிவிக்கவுள்ளதாகக் கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதன் தலைவர், சட்டத்தரணி தர்ஷினி லஹந்தபுர நேற்று (13) கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு இதனைத் தெரிவித்தார்.

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் மற்றும் அதில் தீப்பற்றலுக்கு உள்ளான கொள்கலன்களை அகற்றும் நடவடிக்கைகள் இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாத முற்பகுதியில் முன்னெடுக்கப்படவுள்ளன.

இதன்படி, குறித்த கப்பலுக்குச் சொந்தமான நிறுவனத்தினால் அதற்கான கேள்விப்பத்திரம் கோரப்பட்டிருந்தது.

அதற்கான கால அவகாசம் செப்டெம்பர் 21 ஆம் திகதியுடன் நிறைவடைந்திருந்தது.

இதற்கமைய, 8 நிறுவனங்கள் அதற்கான கேள்விப்பத்திரங்களை முன்வைத்துள்ளதாகக் கப்பலுக்குச் சொந்தமான நிறுவனம் தமக்குத் தெரியப்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், குறித்த பணிகளை மேற்கொள்வதற்குத் தகுதி பெறும் நிறுவனம் தொடர்பான தகவல்களை இன்றைய தினம் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலுக்குச் சொந்தமான நிறுவனம் தமக்கு அறியப்படுத்தவுள்ளதாகக் கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர், சட்டத்தரணி தர்ஷினி லகந்தபுர குறிப்பிட்டுள்ளார்.Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

vijay makakl iyakkam councilor starts his duty after won in election - தமிழ் News

Thu Oct 14 , 2021
ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற மறுநாளே விஜய் மக்கள் இயக்கத்தின் கவுன்சிலர் ஒருவர் மக்கள் பணியை தொடங்கி உள்ள செய்தி பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. பொதுவாக தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் வெற்றி பெறும்வரை வேட்பாளர்கள் மக்களிடம் ஓட்டுக்காக கெஞ்சிக் கொண்டு இருப்பார்கள் என்பதும், வெற்றி பெற்ற பிறகு அவர்களை பார்ப்பதே அரிதாக இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது ஆனால் சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட […]

You May Like

Breaking News

Translate »