மீகஹாவத்தையில் கை குண்டுடன் பெண் கைது


(எம்.மனோசித்ரா)

மீகஹாவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கை குண்டு ஒன்றுடன் பெண்ணொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மீகஹாவத்தை பொலிஸ் பிரிவில் தெல்கொட பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றில் கைகுண்டொன்று இருப்பதாக பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பிலேயே இந்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

சம்பவத்தில் கைதுசெய்யப்பட்ட பெண் 34 வயதுடைய குண்டசாலை பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். 

மீகஹாவத்தை பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ஆன்லைன் கேமிங்கைக் கட்டுப்படுத்த கோரிக்கை

Thu Oct 14 , 2021
ஆன்லைன் கேமிங்கின் அச்சுறுத்தலில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்குமாறு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திடம் (TRCSL) கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஒரு கடிதத்தில், ‘லக்மாவா தியானியோ’ என்ற தேசிய அமைப்பு, டிஆர்சிஎஸ்எல் உடனடியாக தலையிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது. இந்தக் கடிதம் இன்று (14) வழங்கப்பட்டதாக கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர் பிரியங்கா கொத்தலாவாலா கூறுகிறார். இந்த அச்சுறுத்தலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு நாங்கள் அதிகாரிகளை வலியுறுத்துகிறோம், ஏனெனில் நமது எதிர்கால சந்ததியே […]

You May Like

Breaking News

Translate »