ரூ.5 கோடி நோட்டுகளால் அம்மனுக்கு அலங்காரம்: ஆந்திர மாநில தசரா நிகழ்ச்சியில் பக்தர்கள் பிரமிப்பு | 5 crore decorations for amman


என். மகேஷ்குமார்

Published : 14 Oct 2021 05:54 am

Updated : 14 Oct 2021 06:20 am

 

Published : 14 Oct 2021 05:54 AM
Last Updated : 14 Oct 2021 06:20 AM

5-crore-decorations-for-amman
தசரா பண்டிகையை முன்னிட்டு ஆந்திர மாநிலம் நெல்லூரில் உள்ள  வாசவி கன்னிகா பரமேஸ்வரி கோயிலில் நேற்று, 5 கோடி ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

நெல்லூர்

ஆந்திர மாநிலம் நெல்லூரில் உள்ள கன்னிகா பரமேஸ்வரி கோயிலில் ரூ.5 கோடி பணத்தை பயன்படுத்தி அம்மனையும் கோயிலையும் அலங்கரித்து பிரம்மிக்க வைத்தனர்.

தசரா பண்டிகை ஆந்திராவில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. மாநிலத்தில் உள்ள அனைத்து அம்மன் கோயில்களிலும் கடந்த 7-ம் தேதி முதல் சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது.

குறிப்பாக, விஜயவாடா கனகதுர்க்கையம்மன் கோயில், திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில்,ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனா கோயில் உள்ளிட்ட முக்கிய ஆலயங்களில் மாலையில் அம்மனுக்கு விதவிதமான அலங்காரங்கள் செய்யப் படுகின்றன.

இந்நிலையில், ஆந்திர மாநிலம் நெல்லூரில் உள்ள ஸ்ரீவாசவி கன்னிகா பரமேஸ்வரி கோயிலில் நேற்று ரூ.5 கோடிக்கு புத்தம் புதிய நோட்டுகளைப் பயன்படுத்தி அம்மனையும், சந்நிதி உள்ளிட்ட பிற இடங்களையும் அலங்கரித்தனர்.

ரூபாய் நோட்டுகளால் தோரணம்

வாயிற்படி முதல் கர்ப்பக்கிரகம் வரை 500, 200, 100, 50, 20 ரூபாய்நோட்டுகளால் தோரணங்கள், அலங்கார வளைவுகள், மாலைகளும் செய்திருந்தனர். மேலும்தங்க பிஸ்கெட்களும் வைத்திருந்தனர். இதனால் மிகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை கோயில்நிர்வாகிகள் செய்திருந்தனர். பக்தர்களை குறைந்த எண்ணிக்கையிலேயே தரிசனத்துக்கு அனுமதித்தனர்.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Anjana Jayaprakash

Thu Oct 14 , 2021
Anjana Jayaprakash actress images from IndiaGlitz.com hindi Source link

You May Like

Breaking News

Translate »