கிரிக்கெட்டில் கால் பதிக்கும் ரோஹித்த ராஜபக்ச!


(எம்.எம்.சில்வெஸ்டர்)

ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் 27 ஆம் திகதி அன்று நடைபெறவுள்ள  உள்நாட்டின் முன்னணி கழகங்களுக்கிடையிலான 50 ஒவர்கள் கொண்ட போட்டித் தொடரின் களுத்துறை நகர சபை கழகத்துக்கான அணியில் ரோஹித்த ராஜபக்ச இணையவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இப்போட்டிகளில் பங்கேற்பதற்காக மக்கொனையில் அமைந்துள்ள ‘சர்ரே வில்லேஜ் ‘ மைதானத்தில் ரோஹித்த ராஜபக்ச பயிற்சிகளில்ஈடுபட்டு வருவதாகவும் குறிப்பிடப்படுகிறது.

களுத்துறை நகர விளையாட்டு கழக அணியை தெரிவு செய்வதற்காக பயிற்சி போட்டிய இன்றைய தினம் நடைபெற்றுள்ளதுடன், இந்த பயிற்சிப் போட்டியில் ரோஹித்த ராஜபக்சவும் பங்கேற்றிருந்தாக தெரிய வருகிறது.  

கல்கிஸ்ஸை பரி.தோமா கல்லூரியின் பழைய மாணவரான ரோஹித்த, கல்லூரியின் ரக்பி அணியிலும் சீ.எச். அண்ட் எப்.சீ. கழகத்துக்காக விளையாடியுள்ளார். 

“ரோஹித்த ராஜபக்ச எமது அணியுடன் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். எனினும், அவர் இதுவரையிலும் அவரது பெயரை எமது கழகத்தில் பதிவு செய்யவில்லை. எவ்வாறாயினும், அவர் எமது கழகத்தில் பதிவாகி, இப்போட்டித் தொடரில் எமது கழகத்துக்காக விளையாடுவதை எதிர்பார்ப்பதாக”  களுத்துறை நகர சபை கழகத்தின் தலைவர் தீபால் ‍ பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் 27 ஆம் திகதி அன்று ஆரம்பமாகவுள்ள  50 ஓவர்கள் கொண்ட உள்ளூர் அணிகளுக்கு இடையிலான இப்போட்டித் தொடரில் களுத்துறை நகர சபை கழகம் இலங்கை கடற்படை கழகத்தை எதிர்த்தாடவுள்ளது.

 இதேவேளை, இலங்கை கிரிக்கெட் அணியின் வீரரும்  கல்கிஸ்‍ஸை பரி.தோமா கல்லூரியின் பழைய மாணவருமான ஜீவன் மெண்டிஸ், தான் விளையாடும் கழகமான பதுரலெிய விளையாட்டுக் கழகத்தில் ரோஹித்த ராஜபக்சவை இணைத்துக்கொள்ளவதற்கு எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ஆடம் நியூமன் திரும்பி வந்துள்ளார், மேலும் அவர் தனது கோரிக்கைகளை நிறைவேற்ற HBO மேக்ஸ் பெற்றார்

Thu Oct 14 , 2021
HBO மேக்ஸ் அசல் ஆவணப்படங்களுக்குப் பிறகு மாதங்கள் தலைமுறை சலசலப்பு சேவையில் அறிமுகமானார், WeWork இன் இணை நிறுவனர் ஆடம் நியூமானை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு குழு ஸ்ட்ரீமர் ஸ்டார்ட்அப்பின் எழுச்சியை வரைபடமாக்கிய எபிசோடில் சில மொழியை மாற்றியதாக கூறுகிறார். கண்கவர் மரணம். இல் ஒரு ஊழியருக்கு அனுப்பப்பட்ட செய்திக்குறிப்பில் விளிம்பில் இந்த வார தொடக்கத்தில், அவதூறு வழக்கறிஞர் தாமஸ் ஏ கிளேர் – இப்போது தெரிந்தவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர் டெக்கீலா ஆர்வலர் […]

You May Like

Breaking News

Translate »