அரசுடன் பேசுவதாக ஜனாதிபதி வாக்குறுதி| Dinamalar


”லக்கிம்பூரில் விவசாயிகள் படுகொலை தொடர்பாக, மத்திய அரசுடன் உடனடி ஆலோசனை நடத்துவதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்,” என பிரியங்கா கூறினார்.

உத்தர பிரதேசத்தின் லக்கிம்பூரில் சமீபத்தில் நடைபெற்ற கலவரத்தில், நான்கு விவசாயிகள் உட்பட எட்டு பேர் கொல்லப்பட்டனர். கலவரம் தொடர்பாக, மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா உட்பட மூன்று பேரை, போலீசார் கைது செய்து உள்ளனர்.

இந்நிலையில், ராகுல் தலைமையில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அந்தோணி, குலாம்நபி ஆசாத், மல்லிகார்ஜுன கார்கே மற்றும் பிரியங்கா ஆகியோர், டில்லியில் நேற்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.அதில், ‘லக்கிம்பூர் வன்முறை தொடர்பாக, மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்ய வேண்டும்; இச்சம்பவம் குறித்து அரசியல் குறுக்கீடுகள் இன்றி விசாரணை நடத்த வேண்டும்’ என கூறப்பட்டு இருந்தது.

ஜனாதிபதியுடனான சந்திப்பு குறித்து ராகுல் கூறியதாவது:லக்கிம்பூரில் எட்டு பேர் உயிர் இழந்த கலவரம் தொடர்பாக ஆஷிஷ் மிஸ்ரா கைதாகி உள்ளார். இவரது தந்தை அஜய் மிஸ்ரா, மத்திய இணையமைச்சராக இருக்கிறார். இதனால் ஆஷிஷ் மீதான விசாரணை முறையாகவும், நியாயமாகவும் நடக்க வாய்ப்பில்லை. எனவே, இரு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என ஜனாதிபதியிடம் கோரிஉள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.

பிரியங்கா கூறியதாவது;விவசாயிகள் கொலையான விவகாரம் தொடர்பாக விசாரணை கோருவது, எங்கள் கட்சியோ, நானோ, தொண்டர்களோ அல்ல. இது மக்கள் மற்றும் உயிரிழந்தோர் குடும்பத்தினரின் கோரிக்கை. எனவே, மக்களின் குரலுக்கு அரசு செவிசாய்க்க வேண்டும். இவ்விஷயத்தில் எங்கள் கருத்துகளை, ஜனாதிபதியிடம் விரிவாக விளக்கி உள்ளோம். இதுகுறித்து மத்திய அரசிடம் உடனடியாக பேசுவதாக ஜனாதிபதி வாக்குறுதி அளித்து உள்ளார்.இவ்வாறு அவர் கூறினார்.

– நமது டில்லி நிருபர் –

AdvertisementSource link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

என் பிள்ளையை பார்த்து 4 மாசமாச்சு.. கதறி அழும் தலைவி தாமரை செல்வி.. வெளியானது முதல் புரமோ! | Thamarai Selvi talks about his son in Bigg Boss Tamil 5 Day 10 promo 1

Thu Oct 14 , 2021
ரொம்ப அழுகாச்சி பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியில் பல தரப்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ள நிலையில், இந்த சீசன் வித்தியாசமாக இருக்கும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு டைரக்‌ஷன் டீம் அதே பழையட் டீம் தானே என்பது தெரியாமல் போய் விட்டது. அதே அழுகாச்சி சீரியலையே பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் அரங்கேற்றி வருகின்றனர். சர்வைவரே சூப்பர் கடந்த இரு வாரமாக ஒவ்வொரு போட்டியாளர்களும் தங்களின் சொந்த சோக கதைகளை […]

You May Like

Breaking News

Translate »