காங்., நிர்வாகிகள் காமெடி வலைதளங்களில்| Dinamalar


பெங்களூரு:’மைக்’ ஆன் செய்யப்பட்டுள்ளதை அறியாமல், கர்நாடக காங்கிரஸ் தலைவர் சிவகுமார் கமிஷன் பெறுவது குறித்து, முன்னாள் எம்.பி., உக்ரப்பா, ஊடக ஒருங்கிணைப்பாளர் சலீம் பேசிய ‘வீடியோ’ வைரலாக பரவியது.

கர்நாடகாவில், ம.ஜ.த.,வை சேர்ந்த முன்னாள் முதல்வர் குமாரசாமி, காங்கிரஸ் தலைவர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் நேற்று முன்தினம் பேசியிருந்தார். இதை கண்டித்து பேசுவதற்காக, காங்கிரஸ் முன்னாள் எம்.பி., உக்ரப்பா, செய்தியாளர்களை அழைத்திருந்தார். காங்கிரஸ் ஊடக ஒருங்கிணைப்பாளர் சலீம் அருகில் இருந்தார்.

அப்போது, இருவரும் ‘மைக்’ செயல்பாட்டில் இருப்பதை அறியாமல், மாநில காங்., தலைவர் சிவகுமார் செய்யும் ஊழல்கள் குறித்து பேசினர். ‘ரகசியமாக’ அவர்கள் பேசியது, அங்கிருந்த அனைவருக்கும் நன்கு கேட்டது. அந்த வீடியோ வெளியானதும், தனக்கும் முறைகேடுகளுக்கும் சம்பந்தமில்லை என சிவகுமார் கூறினார். மேலும், அந்த நிர்வாகிகள் மீது, கட்சி மேலிடம் நடவடிக்கை எடுத்துள்ளது.

Advertisement



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

வாலி, நாகேஷ் வறுமையில் வாடும் போது சோறு ஆக்கி போட்டவர் ஸ்ரீகாந்த்.. நடிகர் சிவகுமார் நெகிழ்ச்சி!

Wed Oct 13 , 2021
நடிகர் ஶ்ரீகாந்த் 1965 இல் இயக்குநர் ஸ்ரீதர் இயக்கிய வெண்ணிற ஆடை திரைப்படத்தில் அறிமுகம் ஆனார். இவர் நிறைய படங்களில் சிவாஜி கணேசன், சிவக்குமார், முத்துராமன் , ஜெய்சங்கர் போன்ற நடிகர்களோடு துணைப் பாத்திரங்களில் நடித்தார். பின்னர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்ற நடிகர்களோடு எதிர்நாயகனாகத் தோன்றினார். தமிழ் சினிமாவின் பெரிய நட்சத்திரங்கள் கலைஞர்கள் போற்றக்கூடிய நடிகராக விளங்கினார். Source link

You May Like

Breaking News

Translate »