‘அரண்மனை 3’ பட அனுபவத்தை பகிர்ந்த இசையமைப்பாளர் சத்யாசுந்தர் சி இயக்கத்தில் உருவாகி இருக்கும் அரண்மனை 3 திரைப்படம் வருகிற அக்டோபர் 14-ந் தேதி ஆயுத பூஜையன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘அரண்மனை 3’. ஆர்யா ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் ராஷி கன்னா, ஆண்ட்ரியா, சாக்‌ஷி அகர்வால் ஆகியோர் ஹீரோயின்களாக நடித்துள்ளனர். அவ்னி சினிமேக்ஸ் நிறுவனம் சார்பில் குஷ்பு தயாரித்திருக்கும் இப்படத்தை உதயநிதி ஸ்டாலின், ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் மூலம் வெளியிடுகிறார். இப்படம் வருகிற அக்டோபர் 14-ந் தேதி ஆயுத பூஜையன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்நிலையில், இப்படத்தில் பணியாற்றிய அனுபவம் குறித்து இசையமைப்பாளர் சி.சத்யா கூறியதாவது: “இது எனது 25-வது படம். இந்த திரைப்படத்திற்கு பின்னணி இசை அமைப்பதில் எனக்கு அதிக நாட்கள் தேவைப்பட்டது. 20 நாட்களில் முடிக்குமாறு என்னை இயக்குனர் கேட்டுக் கொண்டார். 

அரண்மனை 3 படத்தின் போஸ்டர்

அரண்மனை 3 படத்தின் போஸ்டர்

ஆனால் இந்த லாக்டவுன் எனக்கான நாட்களை அதிகப்படுத்தியது. அதிக நாட்கள் எடுத்துக்கொண்டு சிறப்பாக படத்திற்கு இசை அமைத்துள்ளேன். அரண்மனை படத்தின் மற்ற பாகங்களைவிட இந்த படத்தில் எமோஷனல் காட்சிகள் அதிகமாக இருக்கும்” என தெரிவித்தார்.


https://www.youtube.com/watch?v=videoseriesSource link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

காங்., நிர்வாகிகள் காமெடி வலைதளங்களில்| Dinamalar

Wed Oct 13 , 2021
பெங்களூரு:’மைக்’ ஆன் செய்யப்பட்டுள்ளதை அறியாமல், கர்நாடக காங்கிரஸ் தலைவர் சிவகுமார் கமிஷன் பெறுவது குறித்து, முன்னாள் எம்.பி., உக்ரப்பா, ஊடக ஒருங்கிணைப்பாளர் சலீம் பேசிய ‘வீடியோ’ வைரலாக பரவியது. கர்நாடகாவில், ம.ஜ.த.,வை சேர்ந்த முன்னாள் முதல்வர் குமாரசாமி, காங்கிரஸ் தலைவர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் நேற்று முன்தினம் பேசியிருந்தார். இதை கண்டித்து பேசுவதற்காக, காங்கிரஸ் முன்னாள் எம்.பி., உக்ரப்பா, செய்தியாளர்களை அழைத்திருந்தார். காங்கிரஸ் ஊடக ஒருங்கிணைப்பாளர் சலீம் அருகில் இருந்தார். […]

You May Like

Breaking News

Translate »