நம்ம பெரியபாசு கிட்ட இன்னும் 2 வாரத்திற்கு அழுகாச்சி எபிசோடு இருக்காம்.. கதறும் நெட்டிசன்ஸ்! | Netizens trolls Sad story episodes in Bigg Boss Tamil 5


பிரியங்கா ராஜு சண்டை

பிரியங்கா ராஜு சண்டை

சீக்கிரமே பிக் பாஸ் வீட்டில் தொகுப்பாளினி பிரியங்காவுக்கும் சீரியல் நடிகர் ராஜு ஜெயமோகனுக்கும் கடும் விவாதம் ஏற்படும் என நேற்றைய எபிசோடு மற்றும் புதிய புரமோக்களை பார்த்த ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர். அக்‌ஷரா ரெட்டிக்கு லைக் போட்ட ராஜு பிரியங்காவுக்கு டிஸ்லைக் போட்டது நிச்சயம் பிரச்சனையை கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த வாரமும்

அடுத்த வாரமும்

இன்றைய முதல் புரமோவில் தனது மகனை பிரிந்து வாடும் கண்ணீர் கதையை தாமரை செல்வி சொல்லி உள்ள நிலையில், ” அம்மா நீ அழுதம்மா அடுத்தமுறை நீ நாமினேஷன் வந்தா கண்டிப்பா என் ஓட்டு உனக்கு தான்” என கிண்டல் செய்து வருகின்றனர் நெட்டிசன்ஸ்.

அழுகாச்சி எபிசோடு

அழுகாச்சி எபிசோடு

“நம்ம பெரிய பாசு கிட்ட இன்னும் இரண்டு வாரத்திற்கு அழுகாச்சி எபிசோடு புல்லா இருக்காம்!.. நம்மள ஒரு வழி பண்ணாம விடமாட்டாங்க போலிருக்கு” என வடிவேலு போட்டோ மீமை எல்லாம் போட்டு பிக் பாஸ் நிகழ்ச்சியை வேற லெவலில் பங்கம் பண்ணி வருகின்றனர் பிக் பாஸ் ரசிகர்கள்.

அட்ஜெஸ்ட் பண்ணிக்கிறோம்

அட்ஜெஸ்ட் பண்ணிக்கிறோம்

பலூன் உடைக்கிற டாஸ்க், மியூசிக்கல் சேர், பால் பாசிங் உள்ளிட்ட மொக்கை டாஸ்க்கையாவது கொடுங்க பிக் பாஸ் அட்ஜெஸ்ட் பண்ணி பார்க்கிறோம். ஆனால், இந்த அழுகை எபிசோடு இப்படியே தொடர்ந்து சென்றால் இந்த சீசனும் ஃபிளாப் ஆகி விடும் என விளாசி வருகின்றனர்.

அதிகபிரசங்கி ராஜு

அதிகபிரசங்கி ராஜு

இந்த சீசன்ல கடுமையான போட்டியாளர் என்பதை காட்டிக் கொள்ள வேண்டும் என்றே ஒவ்வொருத்தர் கதைக்கும் தாமாக சென்று காரணத்தை கூறி டிஸ்லைக் போட்டு வரும் ராஜு ஜெயமோகனை அதிபிரசங்கி என வச்சு செய்து வருகின்றனர் பிக் பாஸ் ரசிகர்கள். “அதிகபிரசங்கி ராஜு கதை வரும்னு பார்த்தா இந்த தாமரை கதறிட்டு இருக்காங்க” என கமெண்ட் செய்துள்ளார் இந்த நெட்டிசன்.Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கொழும்பு பல்கலைக்கழகத்தின் புற்றுநோய் செல்களின் விரைவான வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் ஊட்டச்சத்து மருந்து - லங்கா ட்ரூத் | சிங்களம்

Wed Oct 13 , 2021
டாக்டர் சமீரா ஆர்., கொழும்பு பல்கலைக்கழகத்தின் உயிர் வேதியியல், மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிரியல் தொழில்நுட்ப நிறுவனம், புற்றுநோய் நோயாளிகளின் வாழ்க்கைத் தரத்தை பராமரிக்க மற்றும் ஓரளவிற்கு புற்றுநோய் உயிரணுக்களின் விரைவான வளர்ச்சியைத் தடுக்கும் பல ஊட்டச்சத்து மருந்துகள் என்று கூறினார். விரைவில் சந்தையில் தொடங்கப்படும். சமரகோன் கூறுகிறார். இந்த ஊட்டச்சத்துக்களை சந்தையில் கூட்டாக சந்தைப்படுத்த ஒரு புகழ்பெற்ற மருந்து தேயிலை நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாகவும் அவர் கூறினார். இயற்கையான […]

You May Like

Breaking News

Translate »