பீஸ்ட் நடிகைக்கு பிரபாஸ் படக்குழுவினர் கொடுத்த சிறப்பு பரிசு



பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வரும் பூஜா ஹெக்டேவிற்கு பிரபாஸ் படக்குழுவினர் சிறப்பு பரிசு ஒன்றை கொடுத்து இருக்கிறார்கள்.

தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் பூஜா ஹெக்டே. இவர் தற்போது தமிழில் விஜய்க்கு ஜோடியாக ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து வருகிறார். நெல்சன் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பூஜே ஹெக்டே தெலுங்கில் பிரபாசுடன் இணைந்து ‘ராதே ஷ்யாம்’ என்னும் படத்தில் நடித்துள்ளார்.

பூஜா ஹெக்டே

350 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் இப்படம் இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. ராதா கிருஷ்ணகுமார் இயக்கி இருக்கும் இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். இன்று இப்படத்தின் கதாநாயகி பூஜா ஹெக்டே தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். 

இவருக்கு ‘ராதே ஷ்யாம்’ படக்குழுவினர் சிறப்பு பரிசு கொடுக்கும் விதமாக புதிய போஸ்டர் ஒன்றை உருவாக்கி வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்கள். இந்த போஸ்டர் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.


https://www.youtube.com/watch?v=videoseries



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மன்மோகன் சிங் எய்ம்சில் அட்மிட்| Dinamalar

Wed Oct 13 , 2021
புதுடில்லி:முன்னாள் பிரதமரும், காங்., கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங், 89, கடந்த ஏப்ரல் மாதம் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். பின், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.இந்நிலையில், மன்மோகன் சிங்கிற்கு, கடந்த 11ம் தேதி காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. காய்ச்சலில் இருந்து குணமடைந்த அவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.உடல் பலவீனம் அடைந்ததால், அவர் டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். புதுடில்லி:முன்னாள் பிரதமரும், காங்., […]

You May Like

Breaking News

Translate »