கதாநாயகன், வில்லன் என ஆல்ரவுண்ட் நடிப்புக் கலைஞராகத் திகழ்ந்த ஸ்ரீகாந்த்.. கமல்ஹாசன் புகழஞ்சலி! | Kamal Haasan heartfelt note for Legendary Actor Srikanth’s demise


ஸ்ரீகாந்த் காலமானார்

ஸ்ரீகாந்த்
காலமானார்

வெண்ணிற
ஆடை
படத்தில்
ஹீரோவாக
அறிமுகமான
ஸ்ரீகாந்த்
ஏகப்பட்ட
தமிழ்
படங்களில்
பல
விதமான
கதாபாத்திரங்களில்
நடித்து
கலக்கியவர்.
வயது
மூப்பு
மற்றும்
உடல்
நலக்
குறைவு
காரணமாக
நேற்று
காலமானார்.
அவரது
மறைவு
ஒட்டுமொத்த
தமிழ்
திரையுலகையும்
சோகத்தில்
ஆழ்த்தி
உள்ளது.

ஆல்ரவுண்டர் என புகழ்ந்த கமல்

ஆல்ரவுண்டர்
என
புகழ்ந்த
கமல்

“கதாநாயகன்,
வில்லன்,
குணச்சித்திரப்
பாத்திரங்கள்
என
ஆல்ரவுண்ட்
நடிப்புக்
கலைஞராகத்
திகழ்ந்த
ஸ்ரீகாந்த்,
தீவிரமான
இலக்கிய
வாசகராகவும்
ஜெயகாந்தனின்
ஆப்த
சிநேகிதராகவும்
இருந்தார்.
இன்று
தன்
இயக்கங்களை
நிறுத்திக்கொண்டார்.
இதய
கனத்தோடு
வழியனுப்பிவைப்போம்.”
என
பழம்பெரும்
நடிகர்
ஸ்ரீகாந்தின்
மறைவுக்கு
புகழஞ்சலி
செலுத்தி
உள்ளார்
கமல்ஹாசன்.

ரஜினிகாந்த் இரங்கல்

ரஜினிகாந்த்
இரங்கல்

“என்னுடைய
அருமை
நண்பர்
திரு
ஸ்ரீகாந்த்
அவர்கள்
மறைவு
எனக்கு
மிகவும்
வருத்தமளிக்கிறது.
அவருடைய
ஆத்மா
சாந்தியடையட்டும்.”
என
நடிகர்
ரஜினிகாந்த்
தனது
ட்விட்டர்
பக்கத்தில்
நேற்றே
ஸ்ரீகாந்த்
மறைவுக்கு
இரங்கல்
தெரிவித்திருந்தார்.
பல
சினிமா
பிரபலங்களும்
தொடர்ந்து
இரங்கல்
தெரிவித்து
வருகின்றனர்.

மற்றொரு பழம்பெரும் நடிகர் மறைந்தார்

மற்றொரு
பழம்பெரும்
நடிகர்
மறைந்தார்

நேற்று
முன்
தினம்
பழம்பெரும்
நடிகர்
நெடுமுடி
வேணு
காலமான
நிலையில்,
மற்றொரு
பழம்பெரும்
நடிகர்
ஸ்ரீகாந்த்
நம்மை
விட்டு
பிரிந்து
விட்டார்
என
நடிகர்
கார்த்தி
தனது
ட்விட்டர்
பக்கத்தில்
இரங்கலை
பதிவிட்டுள்ளார்.

ரசிகர்கள் இரங்கல்

ரசிகர்கள்
இரங்கல்

வெண்ணிற
ஆடை,
எதிர்நீச்சல்,
நவகிரகம்,
நூற்றுக்கு
நூறு,
காசேதான்
கடவுளடா,
வசந்த
மாளிகை,
ராஜபார்ட்
ரங்கதுரை,
தங்கப்பதக்கம்,
பைரவி,
நீயா,
தம்பிக்கு
எந்த
ஊரு,
பாரதி,
காதல்
கொண்டேன்
உள்ளிட்ட
பல
படங்களில்
பல்வேறு
கதாபாத்திரங்களில்
நடித்து
அசத்திய
ஸ்ரீகாந்தின்
மறைவிற்கு
தமிழ்
சினிமா
ரசிகர்களும்
சினிமா
பிரபலங்களும்
இரங்கல்
தெரிவித்து
வருகின்றனர்.Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பிரெஞ்சு தேசபக்தி இயக்கத்தின் கடைசி விடுதலை வீரரும் இறந்தார்! - லங்கா உண்மை | சிங்களம்

Wed Oct 13 , 2021
ஹுபர்ட் ஜெர்மைன், ஒரு விடுதலை இராணுவ வீரர், ஜெனரல் டி கோல்லே மற்றும் பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியின் தேசபக்தி தேசிய இயக்கம் (சிஎன்ஆர்) பயணம் பற்றி அறிக்கை செய்கிறார், 1940 இல் பிரான்சில் நாஜி சார்பு ஜெர்மன் அரசாங்கத்தால் ஹிட்லருடன் சரணடைவதற்கான துரோக ஒப்பந்தத்தை நிராகரித்தார். இறக்கும் போது, ​​அவருக்கு 101 வயது. 1940 ஆம் ஆண்டில், கிரேட் பிரிட்டனில் கர்னலாக இருந்த ஜெனரல் டி கோல், கிரேட் பிரிட்டனுக்கு […]

You May Like

Breaking News

Translate »