நாகேஷ், வாலிக்கு சோறு போட்டவர் ஸ்ரீகாந்த்… பிரபல நடிகர் உருக்கம்பழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்தின் மறைவுக்கு பிரபல நடிகர் ஒருவர் அறிக்கை வெளியிட்டு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து இருக்கிறார்.

வெண்ணிற ஆடை படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் ஸ்ரீகாந்த். 50-க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். வில்லனாகவும் சிவாஜி, முத்துராமன், ஜெய்சங்கர், சிவகுமார், கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோருடன் இணைந்தும் நடித்துள்ளார். இதுவரை 200-க்கும் மேற்பட்ட படங்களில் ஸ்ரீகாந்த் நடித்துள்ளார். 

உடல் நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்த அவர் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு பிரபலங்களும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்தனர். தற்போது நடிகர் சிவகுமார், ஸ்ரீகாந்த்தின் நினைவுக்குறிப்புகளை பகிர்ந்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், எனது அருமை நண்பர் ஶ்ரீகாந்த் 1965 ஏப்ரலில் ஜெயலலிதாவின் முதல் ஜோடியாக ஶ்ரீதரின் வெண்ணிற ஆடை படத்தின் கதாநாயகனாக அறிமுகமானார். ஈரோட்டில் பிறந்து, அமெரிக்க தூதரகத்தில் பணி புரிந்து, கே.பாலசந்தரால் மேடை நடிகராக பிரபலமடைந்த வெங்கி என்கின்ற ஶ்ரீதர், மேஜர் சந்திரகாந்த் என்ற கதையின் நாடகத்தில் நடித்த கதாபாத்திரத்தின் பெயர் தான் ஶ்ரீகாந்த். திரைப்படத்தில் அறிமுகமாகும் போது அதே பெயரையே ஒப்புக் கொண்டு நடித்தார். 

சிவகுமார்

ஸ்ரீகாந்துடன் சிவகுமார்

நாகேஷ் நகைச்சுவையில் விஸ்வரூபம் எடுத்தார், வாலி கவிதையால் கரை கண்டார், வறுமையின் கோரப்பிடியில் சிக்கி வாலியும், நாகேஷும் துவக்க நாட்களில் சாப்பாட்டுக்கே திண்டாட்டம் போட்ட போது, தன் கையால் சமைத்து போட்டு, மாம்பலம் கிளப் ஹவுசில் இருவரையும் காப்பாற்றியவர் ஶ்ரீகாந்த். கதாநாயகனாக நிற்க முடியவில்லை என்றாலும் ‘சில நேரங்களில் சில மனிதர்கள், ராஜநாகம்’ போன்ற முக்கிய படங்களில் முத்திரை பதித்தார். 

என்னோடு இணைந்து, ‘மதன மாளிகை, சிட்டுக் குருவி, இப்படியும் ஒரு பெண், அன்னக்கிளி, யாருக்கும் வெக்கமில்லை, நவக்கிரகம்’ என பல படங்களில் நடித்தவர். சமீபத்தில் 80 வயது பூர்த்தி அடைந்த விழா கொண்டாடினார். இன்று அவரது ஒரே மகள் மீரா வீட்டில் ஶ்ரீகாந்த், லீலாவதி, மீரா கணவர் ஷக் அலெக்சாண்டர், பேத்தி காவேரி ஆகியோரையும் சந்தித்து ஓவியம், சினிமா என்று இரண்டு காபி டேபிள் புக்ஸை கொடுத்து வாழ்த்தி வந்தேன். இன்று அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்’ இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


https://www.youtube.com/watch?v=videoseriesSource link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

உள்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதில் வேகம்! மாஸ்டர் பிளான் அறிமுகம் செய்து மோடி உறுதி

Wed Oct 13 , 2021
புதுடில்லி :நாடு முழுதும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் புதிய வேகம் மற்றும் ஒருங்கிணைப்பை ஏற்படுத்தும் வகையில், பல்வேறு துறைகளை ஒன்றிணைத்து செயல்படுத்தும், ‘பி.எம்.கதி சக்தி தேசிய மாஸ்டர் பிளான்’ திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று அறிமுகம் செய்தார். நாட்டின் 75வது சுதந்திர தினத்தன்று ஆற்றிய உரையின்போது, ‘100 லட்சம் கோடி ரூபாய் செலவில், முழுமையான உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான ‘பி.எம். கதி சக்தி தேசிய மாஸ்டர் பிளான்’ எனும் திட்டம் […]

You May Like

Breaking News

Translate »