புது திட்டம்! பல அமைப்புகளை ஒன்றிணைக்க அரசு முடிவு| Dinamalar


புதுடில்லி:ஜம்மு – காஷ்மீரில் கடந்த சில நாட்களாக வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளன; குறிப்பிட்ட சிலரைத் தேர்ந்தெடுத்து, அவர்களை கொலை செய்யும் நடவடிக்கைகளில் பயங்கரவாதிகள் ஈடுபட்டு உள்ளனர்.இதை ஒடுக்க மத்திய அரசு புதிய திட்டத்தை வகுத்துள்ளது.

இது குறித்து பாதுகாப்பு படையினர் கூறியுள்ளதாவது:ஜம்மு – காஷ்மீர் விவகாரம் தொடர்பாக, பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா சமீபத்தில் ஆய்வு செய்தார். பல்வேறு புலனாய்வு அமைப்பின் தலைவர்கள் இதில் பங்கேற்றனர்.அந்தக் கூட்டத்தில் புதிய யுக்தி வகுக்கப்பட்டு உள்ளது.

காஷ்மீரை அடிப்படையாக வைத்து, நாடு முழுதும் பயங்கரவாதிகள் குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டு, அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.மேலும், 28 மத்திய புலனாய்வு அமைப்புகளும் ஒருங்கிணைந்து செயல்படும். தற்போது முதல் கட்டமாக காஷ்மீரைத் தவிர, டில்லி, பஞ்சாப், உத்தர பிரதேசத்தில் இந்த திட்டம் செயல்படுத்தப் படுகிறது.

அதன்படி, இந்த அமைப்புகள், அந்தந்த மாநில போலீசாருடன் இணைந்து, உளவு தகவல்களை பகிர்ந்து கொள்ளும். அதனடிப்படையில் பயங்கரவாதிகள் அடையாளம் காணப்பட்டு, கைது செய்யப்படுகின்றனர்.அடுத்த சில மாதங்களுக்கு இந்த நடவடிக்கை தொடரும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

பயங்கரவாதி சுட்டுக் கொலை

ஜம்மு – காஷ்மீரின் அவந்திபுரா பகுதியில் பதுங்கியுள்ள பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. இதில், ஜெய்ஷ் – இ – முகமது பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த முக்கிய பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

AdvertisementSource link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கண்டி வீரர்களுக்கு 7s வாய்ப்பு வழங்கப்படும் - விளையாட்டு

Wed Oct 13 , 2021
விளையாட்டு மற்றும் இலங்கை ரக்பி (SLR) அமைச்சகம் கண்டி SC மற்றும் CR & amp; இந்த மாத இறுதியில் போலீஸ் விளையாட்டுக் கழகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட கிளப் 7 இல் பங்கேற்க முடியாது என்று முன்னதாக தெரிவித்த போதிலும், FC தேசிய தேர்வுக்கு பரிசீலிக்கப்படும். அக்டோபர் 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் போலீஸ் எஸ்சி & ட்ரை ஃபோர்ஸ் ரக்பி போட்டியில் சிஆர் மற்றும் கண்டி தேசிய […]

You May Like

Breaking News

Translate »