செல்வராகவன் – தனுஷ் படத்தின் புதிய அப்டேட் |நீண்ட இடைவெளிக்குப் பிறகு செல்வராகவன், தனுஷ் கூட்டணியில் உருவாக இருக்கும் படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

காதல் கொண்டேன், புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம் என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கி பிரபலமானவர் செல்வராகவன். இவர் இயக்கத்தில் அடுத்ததாக ‘நானே வருவேன்’ திரைப்படம் உருவாக உள்ளது. 

தனுஷ் ஹீரோவாக நடிக்க உள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆகஸ்ட் 17-ந் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் திட்டமிட்டபடி தொடங்கப்படவில்லை. பீஸ்ட் படத்தில் செல்வராகவன் நடித்து வந்ததால் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க தாமதமானது.

நானே வருவேன்

நானே வருவேன் படத்தின் போஸ்டர்

இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 16ம் தேதி தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நானே வருவேன் படத்தை கலைப்புலி தாணு தயாரிக்க இருக்கிறார்.


https://www.youtube.com/watch?v=videoseriesSource link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

புது திட்டம்! பல அமைப்புகளை ஒன்றிணைக்க அரசு முடிவு| Dinamalar

Wed Oct 13 , 2021
புதுடில்லி:ஜம்மு – காஷ்மீரில் கடந்த சில நாட்களாக வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளன; குறிப்பிட்ட சிலரைத் தேர்ந்தெடுத்து, அவர்களை கொலை செய்யும் நடவடிக்கைகளில் பயங்கரவாதிகள் ஈடுபட்டு உள்ளனர்.இதை ஒடுக்க மத்திய அரசு புதிய திட்டத்தை வகுத்துள்ளது. இது குறித்து பாதுகாப்பு படையினர் கூறியுள்ளதாவது:ஜம்மு – காஷ்மீர் விவகாரம் தொடர்பாக, பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா சமீபத்தில் ஆய்வு செய்தார். பல்வேறு புலனாய்வு அமைப்பின் தலைவர்கள் இதில் […]

You May Like

Breaking News

Translate »