100 கோடி தடுப்பூசி டோஸ் வரும் வாரத்தில் சாதனை| Dinamalar


புதுடில்லி:’நாட்டில் கொரோனாவுக்கு எதிராக போடப்படும் தடுப்பூசி ‘டோஸ்’ அடுத்த வாரத்தில்100 கோடியை எட்டி சாதனை படைக்கும்’ என, மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம்தெரிவித்துள்ளது.

இது குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: கொரோனா தொற்றை குறைக்கும் வகையில் மத்திய அரசு நாடு முழுதும் மக்களுக்கு இலவசமாக தடுப்பூசியை செலுத்தி வருகிறது.இதுவரை மொத்தம் 96 கோடியே 70 லட்சம் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்டோரில் 73 சதவீதம் பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்டு உள்ளது; 30சதவீதம் பேருக்கு இரண்டு டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.அடுத்த வாரத்தில் 100 கோடி தடுப்பூசி டோஸ் செலுத்தி இந்தியா சாதனை படைக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

அன்றைய கார்ட்டூன்

Wed Oct 13 , 2021
Source link

You May Like

Breaking News

Translate »