பிறந்தநாளில் காதலனை அறிமுகப்படுத்திய நடிகை ரகுல் பிரீத் சிங்


பிறந்தநாளில் காதலனை அறிமுகப்படுத்திய நடிகை  ரகுல்  பிரீத் சிங்

10/11/2021 10:17:09 AM

சென்னை: தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் ஹீரோயினாக நடித்து வருபவர், ரகுல் பிரீத் சிங். தற்போது கமல்ஹாசனுடன் ‘இந்தியன் 2’, சிவகார்த்திகேயனுடன் ‘அயலான்’ ஆகிய படங்களில் நடிக்கும் அவர், ஐதராபாத்தில் யோகா பயிற்சி மையம் நடத்தி வருகிறார். சமீபத்தில் போதைப்பொருள் வழக்கில் சம்மன் அனுப்பி விசாரிக்கப்பட்டு, பிறகு அதிலிருந்து விடுவிக்கப்பட்டார். நேற்று ரகுல் பிரீத் சிங்கின் பிறந்தநாள். இதையொட்டி தனது காதலனை அறிவித்தார். பாலிவுட் நடிகரும், தயாரிப்பாளருமான ஜக்கி பக்னானியை காதலித்து வருவதை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

தமிழில் திரிஷா நடிப்பில் வெளியான ‘மோகினி’ என்ற படத்தில் ஜக்கி பக்னானி நடித்திருக்கிறார். இந்நிலையில், நேற்று ஜக்கி பக்னானியுடன் இருக்கும் படத்தை வெளியிட்ட ரகுல் பிரீத் சிங், ‘நன்றி அன்பே. இந்த ஆண்டு நீ எனக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு. என் வாழ்க்கையில் வண்ணத்தை சேர்த்த உனக்கு என் நன்றி. என்னை இடைவிடாமல் சிரிக்க வைப்பதற்கு நன்றி. நீ நீயாகவே இருப்பதற்கு நன்றி. இன்னும் ஒன்றாக சேர்ந்து அதிக நினைவுகளை உருவாக்குவதற்கு’ என்று தெரிவித்துள்ளார்.

பதிலுக்கு ஜக்கி பக்னானி வெளியிட்டுள்ள பதிவில், ‘நீயின்றி நாட்கள் நாட்களாக இல்லை. நீயின்றி மிகவும் சுவையான உணவுகளில் எந்த சுவாரஸ்யமும் இல்லை. எனக்கு மிகவும் முக்கியமான, மிக அழகான ஒரு ஆன்மாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். உன் புன்னகையை போலவே இந்நாளும் உனக்கு மிகவும் பிரகாசமாகவும், உன்னை போல் அழகாகவும் இருக்கட்டும். பிறந்தநாள் வாழ்த்துகள் என் அன்பே’ என்று குறிப்பிட்டுள்ளார்.Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

100 கோடி தடுப்பூசி டோஸ் வரும் வாரத்தில் சாதனை| Dinamalar

Wed Oct 13 , 2021
புதுடில்லி:’நாட்டில் கொரோனாவுக்கு எதிராக போடப்படும் தடுப்பூசி ‘டோஸ்’ அடுத்த வாரத்தில்100 கோடியை எட்டி சாதனை படைக்கும்’ என, மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம்தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: கொரோனா தொற்றை குறைக்கும் வகையில் மத்திய அரசு நாடு முழுதும் மக்களுக்கு இலவசமாக தடுப்பூசியை செலுத்தி வருகிறது.இதுவரை மொத்தம் 96 கோடியே 70 லட்சம் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நாட்டில் 18 […]

You May Like

Breaking News

Translate »