நடிகர் விஜய் தேவரகொண்டாவை இயக்க காத்திருக்கும் பிரபல தமிழ் இயக்குனர்! | Gautham Menon Likely to Direct a Movie with Vijay Devarakonda


எக்கச்சக்கமான ரசிகர்கள்

எக்கச்சக்கமான ரசிகர்கள்

அர்ஜுன் ரெட்டி வெற்றிக்கு பிறகு இந்திய அளவில் அனைவராலும் ரசிக்கக் கூடிய மிகச் சிறந்த நடிகராக மாறி உள்ளார் விஜய் தேவரகொண்டா. தெலுங்கில் இவர் நடித்த அனைத்து திரைப்படங்களும் பாக்ஸ் ஆபீஸில் ஹிட்டடித்து வர அர்ஜுன் ரெட்டி தமிழ் மற்றும் ஹிந்தி மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு பட்டையைக் கிளப்பியது. தெலுங்கில் மட்டுமல்லாமல் பல மொழிகளில் இவருக்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் இருக்க இவரது திரைப்படங்கள் அனைத்து மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியாகி வருகிறது.

அர்ஜுன் ரெட்டி சாயலிலேயே

அர்ஜுன் ரெட்டி சாயலிலேயே

அறிமுகமான சில வருடங்களிலேயே தெலுங்கு சினிமாவை ஆட்டிப்படைக்கும் முன்னணி நடிகராக உயர்ந்துள்ள விஜய் தேவரகொண்டாவிற்கு கடைசியாக வெளியான வேர்ல்டு ஃபேமஸ் லவ்வர் சரியாக கை கொடுக்கவில்லை மாறாக தோல்வியை தழுவியது. அர்ஜுன் ரெட்டி சாயலிலேயே இந்தப்படமும் உருவாக்கப்பட்டதால் பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது ஆனால் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை.

முரட்டுத்தனமான குத்துச் சண்டை

முரட்டுத்தனமான குத்துச் சண்டை

இந்த நிலையில் அடுத்ததாக தெலுங்கில் முன்னணி இயக்குனராக உள்ள பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் லீகர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதுவரை லவ்வர் பாயாக படங்களில் நடித்து அனைவரையும் ரசிக்க வைத்து வந்த விஜய் தேவரகொண்டா லீகர் திரைப்படத்தில் முரட்டுத்தனமான குத்துச் சண்டை வீரராக நடித்துள்ளார். கரண் ஜோஹர் மற்றும் நடிகை சார்மி இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தெலுங்கு மற்றும் ஹிந்தி என இரு மொழிகளிலும் இப்படம் தயாராகிவருகிறது.

அட்டகாசமான காதல் கதை

அட்டகாசமான காதல் கதை

தமிழில் நோட்டா படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான விஜய் தேவரகொண்டா அதன்பிறகு எந்த ஒரு தமிழ் படத்திலும் நடிக்கவில்லை. இந்த நிலையில் தமிழில் முன்னணி நடிகராக உள்ள இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் விஜய் தேவரகொண்டாவுக்காக அட்டகாசமான காதல் கதையை தயார் செய்து இருப்பதாகவும்.

கௌதம் வாசுதேவ் மேனன்

கௌதம் வாசுதேவ் மேனன்

விரைவில் கால்சீட் கிடைத்த உடன் இருவரும் இணைந்து புதிய திரைப்படத்தில் பணியாற்றிய ஆவலாக உள்ளதாகவும் சமீபத்தில் பேட்டி ஒன்றில் ஓபனாக தெரிவித்திருந்தார். விஜய் தேவர கொண்டா லீகர் படத்தை தொடர்ந்து டக் ஜெகதீஷ் பட இயக்குனர் சிவா நிர்வனா இயக்கத்தில் நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பெட்ரோல் மற்றும் டீசலை அதிகரிக்கவும் - ஐஓசி கோருகிறது

Wed Oct 13 , 2021
இந்தியன் ஆயில் கம்பெனி (IOC) இலங்கைக்கு பெட்ரோல் விலையை லிட்டருக்கு 15 ரூபாயும், டீசல் லிட்டருக்கு 25 ரூபாயும் உயர்த்த வேண்டும் […] பதவி பெட்ரோல் மற்றும் டீசலை அதிகரிக்கவும் – ஐஓசி கோருகிறது முதலில் தோன்றியது லங்கா உண்மை | சிங்களம் இலங்கையிலிருந்து சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள். Source link

You May Like

Breaking News

Translate »