பா.ஜ., தலைவர்கள் வீட்டு முன் சிவகுமார் மாலையுடன் காத்திருப்பு : குமாரசாமி கிண்டல்| Dinamalar


ராம்நகர்:”ம.ஜ.த., தலைவர்களின் வீடுகள் முன், மாநில காங்கிரஸ் தலைவர் சிவகுமார் வலையுடன் அமர்ந்திருக்கிறார்,” என ம.ஜ.த., முன்னாள் முதல்வர் குமாரசாமி கிண்டலாக தெரிவித்தார்.
ராம்நகரில் அவர் கூறியதாவது:தக்க பதிலடி பொய் சொல்வதில், காங்கிரஸ் தலைவர்கள் வல்லவர்கள். அவர்களுக்கு மக்களே, தக்க பதிலடி கொடுப்பர். மறைந்த எம்.எல்.ஏ., மனகோலி, சிவகுமாரின் வீட்டுக்கல்ல; அவர் அருகிலும் சென்றதில்லை. மனகோலியின் மகன் அசோக் சென்றிருக்கக்கூடும்.

ஷிவமொகாவின் தலைவர் ஒருவரை, கட்சிக்கு இழுக்க ஆண்டுக்கணக்கில், அவரது வீட்டு முன்பாக வலை விரித்து அமர்ந்திருந்ததாக, சிவகுமார் கூறியுள்ளார். அவர் இப்போதும், ம.ஜ.த., தலைவர்கள் வீட்டு முன்பாக, வலை விரித்து அமர்ந்திருக்கிறார். வலை விரிக்கும் பழக்கமே, காங்கிரஸ் தலைவர்களுக்கு, பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். அனைத்தையும் காலமே தீர்மானிக்கும்.குமாரசாமி மற்றும் மக்களுக்கு இடையிலான தொடர்பை கண்டு, காங்கிரசார் நடுங்குகின்றனர்.

என் மீது மக்களுக்குள்ள அன்பு, நம்பிக்கையை கண்டு, இக்கட்சியினர் மனம் நொந்துள்ளனர். இவர்களுக்கு ராம்நகர் மாவட்ட அபிவிருத்தி குறித்து தெரியாது. சரியான தொலைநோக்கு பார்வையில்லை. அரசியலை தவிர, அவர்களுக்கு விவாதிக்க வேறு விஷயமே இல்லை. மாநிலத்தில் என்னை பற்றியும், ம.ஜ.த., வை பற்றியும், காங்கிரசாருக்கு பயம் உள்ளது. இதனால் என் மீது, தேவையற்ற குற்றச்சாட்டுகளை சுமத்துகிறார்.

சென்னப்பட்டணா தொகுதிக்கு, இக்கட்சியினரின் பங்களிப்பு என்ன. எங்கள் கட்சியை பலப்படுத்துவதில், நான் ஈடுப்பட்டிருந்தாலும், சென்னப்பட்டணா பிரச்னைகளில் அக்கறை காண்பித்துள்ளேன்.தொகுதி தொடர்பாக, அதிகாரிகளுடன் நிரந்தர தொடர்பில் உள்ளேன். சென்னப்பட்டணாவில், தண்ணீர் தொட்டியில் பெண்ணின் கால் கண்டுப்பிடிக்கப்பட்டது குறித்து நடவடிக்கை எடுக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

மக்களுக்கு தொந்தரவு ஏற்படாமல், ஒவ்வொரு வீட்டுக்கும் குடிநீர் வழங்கியுள்ளோம்.தேர்தல் செலவுதசரா முடிந்த பின், அக்டோபர் 16ல் நான் இடைத்தேர்தல் பிரசாரத்துக்கு செல்கிறேன். சிந்தகியில் நாங்களே வெற்றி பெறுவோம். தேர்தல் அறிவிப்புக்கு முன்பே, எங்கள் வேட்பாளர் நாஜியா ஷகீலா அங்கடி, பிரசாரத்துக்கு சென்றார். அப்போது மக்களே, 50 ஆயிரம் ரூபாய் வசூலித்து, அவருக்கு தேர்தல் செலவுக்கு கொடுத்தனர்.

இது எங்கள் கட்சி மீது, மக்கள் வைத்துள்ள அன்பை காண்பிக்கிறது. சிந்தகியில் காங்கிரஸ், 3வது இடத்தில் உள்ளது. ஹானகல் தொகுதியிலும், ம.ஜ.த., அலை உள்ளது. எம்.டெக்., பட்டதாரியான நியாஜ் ஷேக் என்ற இளைஞருக்கு, டிக்கெட் கொடுத்துள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

நடிகர் விஜய் தேவரகொண்டாவை இயக்க காத்திருக்கும் பிரபல தமிழ் இயக்குனர்! | Gautham Menon Likely to Direct a Movie with Vijay Devarakonda

Wed Oct 13 , 2021
எக்கச்சக்கமான ரசிகர்கள் அர்ஜுன் ரெட்டி வெற்றிக்கு பிறகு இந்திய அளவில் அனைவராலும் ரசிக்கக் கூடிய மிகச் சிறந்த நடிகராக மாறி உள்ளார் விஜய் தேவரகொண்டா. தெலுங்கில் இவர் நடித்த அனைத்து திரைப்படங்களும் பாக்ஸ் ஆபீஸில் ஹிட்டடித்து வர அர்ஜுன் ரெட்டி தமிழ் மற்றும் ஹிந்தி மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு பட்டையைக் கிளப்பியது. தெலுங்கில் மட்டுமல்லாமல் பல மொழிகளில் இவருக்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் இருக்க இவரது திரைப்படங்கள் அனைத்து மொழிகளிலும் டப் […]

You May Like

Breaking News

Translate »