நடிகை பிரக்யாவுக்கு மீண்டும் கொரோனா – Dinakaran Cinema News


நடிகை பிரக்யாவுக்கு மீண்டும் கொரோனா

10/12/2021 10:36:04 AM

சென்னை: நடிகை பிரக்யா ஜெய்ஸ்வாலுக்கு கொரோனா அறிகுறி இருப்பதால், அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். பாலிவுட் நடிகையான பிரக்யா ஜெய்ஸ்வால், தெலுங்கில் பல படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் விரட்டு படத்தில் நடித்திருந்தார். இப்போது பாலகிருஷ்ணா ஜோடியாக அகந்தா படத்திலும் இந்தியில் சல்மான் கானுடன் அந்திம் படத்திலும் நடித்து வருகிறார். இதுகுறித்து பிரக்யா கூறும்போது, ‘நான் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டேன். ஆனால், எனக்கு தற்போது கொரோனா அறிகுறிகள் இருப்பதால் என்னை நான் தனிமைப்படுத்திக் கொண்டேன்.

ஏற்கனவே, தடுப்பூசி போடுவதற்கு முன்னதாக எனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. தொடர் சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்தேன்.  தற்போது லேசான கொரோனா அறிகுறி வந்துள்ளதால் மருத்துவர்களின் ஆலோசனையின் கீழ் அனைத்து பாதுகாப்பு நெறிமுறைகளையும் பின்பற்றுகிறேன். கடந்த 10 நாட்களில் என்னுடன் தொடர்பு கொண்ட அனைவரும் தங்களை கவனித்துக் கொள்ள வேண்டும். அவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். மீண்டும் சந்திப்போம்’ என்று தெரிவித்துள்ளார்.Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

சினிமா ஆசைகாட்டி பல பெண்களை சீரழித்த ‘டுபாக்கூர்’ இயக்குநர் கைது: செல்போனில் நூற்றுக்கணக்கான வீடியோக்கள்; பல லட்சம் பணம் பறித்து சொகுசு வாழ்க்கை

Wed Oct 13 , 2021
ராமநாதபுரம்: சினிமாவில் நடிக்க வைப்பதாக ஆசைவார்த்தை கூறி பல பெண்களை சீரழித்து, வீடியோ எடுத்து மிரட்டி பல லட்சம் பணம் பறித்த டுபாக்கூர் இயக்குநர் ராமேஸ்வரம் போலீசில் சிக்கினார். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியை சேர்ந்தவர் சக்தி (எ) இமானுவேல் ராஜா (43). கடந்த 40 நாட்களுக்கு முன் சினிமா எடுப்பதாக கூறி ராமேஸ்வரத்தில் 7 விடுதிகளில் அறைகள் முன்பதிவு செய்துள்ளார். அவர் தனியாக நட்சத்திர விடுதி ஒன்றில் தங்கினார். பின்னர் […]

You May Like

Breaking News

Translate »