ஆவினில் வேலை வாங்கித் தருவதாக ஓபிஎஸ் சகோதரர் பெயரை கூறி மோசடி: எஸ்பி அலுவலகத்தில் புகார்


தேனி: தேனி மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில், பெரியகுளம் தென்கரையை சேர்ந்த வணங்காமுடி மனைவி விஜயராணி நேற்று ஒரு மனு அளித்துள்ளார். அதில், ‘‘எங்கள் மகன் ஆறுமுகத்திற்கு தேனி ஆவினில் வேலை வாங்கித் தருவதாக கூறி பெரியகுளம் தென்கரையில் வசிக்கும் அனுப்பிரியா மற்றும் அவரது கணவர் சரவணன், உறவினர் அய்யப்பராஜ் ஆகியோர் ரூ.3.60 லட்சம் பெற்றுக் கொண்டனர். ஆனால் வேலை வாங்கித் தராமல் ஏமாற்றிவிட்டனர் ’’ என கூறியிருந்தார். பெரியகுளம் தென்கரையை சேர்ந்த கார்த்திக் அளித்த மனுவில், ‘‘அனுப்பிரியா, அவரது கணவர் சரவணன், உறவினர் அய்யப்பராஜ் ஆகியோர் தேனி ஆவின் நிறுவனத் தலைவராக இருக்கும் ஓ.ராஜா தங்களின் உறவினர் எனக் கூறி, ஆவினில் வேலை வாங்கித்தருவதாக முன்பணமாக ரூ.1 லட்சம் பெற்றுக் கொண்டு வேலை வாங்கித் தராமல் தலைமறைவாகி உள்ளனர். பணத்தை மீட்டு தர வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கொரோனா ஒழிய வேண்டும்அரசு சார்பில் வழிபாடு| Dinamalar

Wed Oct 13 , 2021
பெங்களூரு:இரண்டு ஆண்டுகளாக மக்களை வாட்டி வதைக்கும் கொரோனா ஒழிய வேண்டும் என, பிரார்த்தனை செய்து, விஜயதசமி நாளான நாளை, மாநில அரசு சார்பில் பூஜை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அறநிலையத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை:கர்நாடகாவில், இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று, மக்களை தொந்தரவுக்கு ஆளாகியது. இந்த தொற்று ஒழிய வேண்டும் என, கடவுளிடம் வேண்டுதல் வைத்து, விஜயதசமியன்று சிறப்பு பூஜை செய்ய அரசு முன் வந்துள்ளது.அன்றைய தினம், மாநிலத்தின் அனைத்து […]

You May Like

Breaking News

Translate »