தடுப்பூசி போடாதவர்களுக்குரேஷன் கட்| Dinamalar


துமகூரு:”கொரோனா தடுப்பூசி பெறாதோருக்கு, ரேஷன் பொருட்கள் வழங்குவதை நிறுத்தும்படி, ஆலோசனை கூறப்பட்டுள்ளது,” என, சட்டத்துறை அமைச்சர் மாதுசாமி தெரிவித்தார்.துமகூரில் அவர் கூறியதாவது:

இதற்கு முன், கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை என, கூறி வந்தனர். இப்போது போதுமான அளவில் இருந்தாலும், தடுப்பூசி பெற மக்கள் முன் வருவதில்லை.கொரோனாவை கட்டுப் படுத்த வேண்டுமானால், அனைவரும் தடுப்பூசி பெறுவது கட்டாயம். எனவே தடுப்பூசி பெறாதோருக்கு, ரேஷன் பொருட்களை வழங்க வேண்டாம் என, ஆலோசனை கூறப்பட்டு உள்ளது.

துமகூரு மாவட்ட அளவிலாவது, இந்த விதிமுறையை கொண்டு வர வேண்டும். இது குறித்து மாவட்ட எம்.எல்.ஏ.,க்களுடன், ஆலோசனை நடத்தப்படும்.கொரோனா எப்போது வேண்டுமானாலும், அதிகரிக்கக்கூடும். இதை கட்டுப்படுத்த இப்போதிருந்தே, நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால், தொந்தரவை அனுபவிக்க வேண்டி வரும்.இவ்வாறு அவர் கூறினார்.

AdvertisementSource link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பாவனி உங்களுக்கு மனைவியா? தோழியா? பிரிந்துபோன முன்னாள் காதலரின் நெகிழ வைக்கும் பதில்! | Pavani Reddy's ex lover supports her

Wed Oct 13 , 2021
வெப் சீரிஸ்களில் பாவனி படம் ஒன்றில் ஆபாச காட்சியில் நடித்திருந்தார். அந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது. தற்போது மேலும் சில படங்களில் கமிட்டாகியுள்ள பாவனி ரெட்டி வெப் சீரிஸ்களிலும் ஒப்பந்தமாகியுள்ளார். வீட்டை எதிர்த்து திருமணம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள நடிகை பாவனி ரெட்டி கதை சொல்லட்டுமா டாஸ்க்கில் தனது கடந்த காலத்தை பற்றி பகிர்ந்து கொண்டார். அதில் காதலர் பிரதீப்குமாரை வீட்டை எதிர்த்து திருமணம் செய்துக்கொண்டதாகவும், திருமணத்திற்கு பிறகு […]

You May Like

Breaking News

Translate »