சரஸ்வதி பூஜையை முன்னிட்டு நாளை வெளியாகும் தமிழ் திரைப்படங்கள்


ஆர்யாவின் ‘அரண்மனை 3’, ஜோதிகாவின் ‘உடன்பிறப்பே’ படங்கள் நாளை வெளியாகின்றன.

சரஸ்வதி பூஜையை முன்னிட்டு நாளை தியேட்டரிலும் ஓடிடியிலும் திரைப்படங்கள் வெளியாகின்றன. 2டி எண்டர்டெய்ன்மெண்ட் சார்பில் ஜோதிகா மற்றும் சூர்யா தயாரிப்பில், ‘கத்துக்குட்டி’ திரைப்பட இயக்குநர் சரவணன் இயக்கியுள்ள திரைப்படம், ’உடன்பிறப்பே’. இதில் சசிகுமாரும் ஜோதிகாவும் அண்ணன் தங்கையாக நடித்துள்ளனர். ஆயுத பூஜையை முன்னிட்டு நாளை 14 ஆம் தேதி இந்தத் திரைப்படம் அமேசான் பிரைமில் வெளியிடப்படுகிறது.

image

அதேபோலசுந்தர். சி இயக்கத்தில் வெளியான ’அரண்மனை’, ’அரண்மனை 2’ ஆகிய திரைப்படங்கள் வசூல் ரீதியில் பெரும் வெற்றி அடைந்தன. நகைச்சுவை வகையில் எடுக்கப்பட்ட அந்தப் படங்களின் மூன்றாவது பாகத்தை இயக்குனர் சுந்தர். சி தற்போது இயக்கியுள்ளார். இதில் ஆர்யா, ராஷி கண்ணா, மறைந்த நடிகர் விவேக் உள்ளிட்ட ஏராளமான முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்தப் படமும் நாளை தியேட்டர்களில் வெளியாகிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மின்வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக 40 லட்சம் மோசடி: உதவி பொறியாளர் மீது போலீசில் புகார்

Wed Oct 13 , 2021
திருவொற்றியூர்: தண்டையார்பேட்டை ரெட்டை குழி தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ்(31), இவருக்கு வடசென்னை அனல்மின் நிலையத்தில் உதவி பொறியாளராக வேலை பார்த்த பாபு(43) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் மாதம் மின்வாரியத்தில் டெண்டர் எடுத்து தருவதாக கூறி சுரேஷிடம் 42 லட்சம் ரொக்கமாக பாபு பெற்றதாக தெரிகிறது. அதுமட்டுமின்றி மார்ச் 2017ல் மின்வாரியத்தில் வேலை வாங்கி உதவி பொறியாளர் பாபுவிடம் 20 லட்சமும், அவரது மனைவி […]

You May Like

Breaking News

Translate »