பெண் தொழிலாளர்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட உத்தியோகத்தர்களுக்கு பிணை


மஸ்கெலியா பிளான்டேசன் கம்பனியின் கீழ் இயங்கும் தலவாக்கலை கட்டுக்கலை தோட்டத்தில் இரு பெண் தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் தாக்குதல் மேற்கொண்டவர்கள் என சந்தேகத்தின் பேரில் அத்தோட்ட உதவி வெளிக்கள உத்தியோகத்தர்கள் இருவர் தலவாக்கலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் கைதுசெய்யப்பட்டவர்கள் இருவரையும் பிணையில் விடுவிக்க நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதபதி டி. ஜீ. பிரதீப ஜயசிங்க நேற்று (12) செவ்வாய்கிழமை அனுமதி வழங்கினார். 

கடந்த மாதம் 28 ஆம் திகதி கட்டுக்கலை தோட்டத்தில் தொழிலாளர்கள் சிலருக்கும் அத்தோட்ட உதவி அதிகாரி மற்றும் வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் பின்னர் கைகலப்பில் முடிந்தது. 

இதன்போது தோட்ட தொழிலாளர்கள் மீது அத்தோட்ட உதவி அதிகாரி மற்றும் உதவி வெளிக்கள உத்தியோகத்தர்கள் இருவர் தாக்குதல் மேற்கொண்டனர்.

தோட்ட உதவி அதிகாரி மற்றும் உதவி வெளிக்கள உத்தியோகத்தர்களால் தாக்கப்பட்டதாக இரு பெண் தொழிலாளர்களும்  லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தனர்.

குறித்த பெண் தொழிலாளர்கள் இருவர் அன்றையதினம் வழங்கிய முறைப்பாட்டையடுத்து அத்தோட்ட உதவி வெளிக்கள உத்தியோகத்தர்கள் இருவர் தலவாக்கலை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு கடந்த 08 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டநிலையில் இருவரையும் நேற்று(12)செவ்வாய்கிழமை வரை விளக்கமறியலில் வைக்க நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதவான் உத்தரவு விட்டிருந்தார். 

இதன்படி நேற்று 12 ஆம் திகதி அவர்களை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபொழுது அவர்களை தலா ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணைகளில் விடுவிக்க நீதிபதி உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கு விசாரணை டிசம்பர் மாதம் 7 ஆம் திகதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

யோஹானி இந்தியாவிலிருந்து திரும்புகிறார் - இலங்கை சமீபத்திய பிரேக்கிங் நியூஸ்

Wed Oct 13 , 2021
உலகின் பல நாடுகளில் பிரபலமடைந்த இலங்கை பாடகி யோஹானி, இந்தியாவில் பல இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்று நாடு திரும்பினார். அவர் நேற்று இரவு (12) 11.25 மணிக்கு மும்பையிலிருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தார். “இந்திய மக்களுக்கு இலங்கையைப் பற்றி தெரியும் ஆனால் சிங்களம் என்று ஒரு மொழி இருக்கிறது என்று தெரியாது. அந்த மக்கள் கேள்விப்படாத ஒரு மொழியில் நான் ஒரு பாடலைப் பாடியபோது, ​​அது இந்தியா […]

You May Like

Breaking News

Translate »