அண்ணன் நான் இருக்கேன்… பாவனிக்கு ஆறுதல் சொல்லும் இமான் அண்ணாச்சி | Imman Annachi give positive vibe to Pawani Reddy


bredcrumb

News

oi-Mohana Priya S

|

சென்னை : பிக்பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியின் பத்தாம் நாளான இன்று மீதமுள்ள போட்டியாளர்கள் தங்களின் வாழ்க்கையை பற்றி சொல்லும் பகுதி நடைபெற்றது. இன்று அபிஷேக் ராஜா, தாமரை செல்வி, வருண் உள்ளிட்டோர் தங்களின் வாழ்க்கை கதையை கூறினார்கள்.

இதில் தாமரை செல்வியின் கதையை கேட்டு ஹவுஸ்மெட்கள் அனைவரும் கண்கலங்கினர். அனைவரும் அவருக்கு ஆறுதல் தெரிவித்தனர். அப்போது எழுந்து வந்த அபிஷேக் ராஜா, நீ நிச்சயம் ஜெயிப்ப. என உணர்ச்சி பொங்க வாழ்த்து தெரிவித்தார்.

Imman Annachi give positive vibe to Pawani Reddy

பிறகு கார்டனில் தனியாக அமர்ந்திருக்கும் பாவனி ரெட்டியிடம் இமான் அண்ணாச்சி சென்று பேசுகிறார். அப்போது அழுதபடி, தான் தனியாகி விட்டதாக நினைப்பதாக பாவனி ரெட்டி வருத்தப்பட்டு சொல்கிறார். அவருக்கு ஆறுதல் சொல்லும் அண்ணாச்சி, ஏன் அப்படி நினைக்கிறாய். இத்தனை கஷ்டங்களையும் தாண்டி நீ தைரியமாக சிரித்துக் கொண்டிருப்பதே பெரிய விஷயம் என்கிறார்.

பாவனியும், நான் கொஞ்சம் தான் சொல்லி இருக்கிறேன். நிறைய விஷயங்களை நான் சொல்லவே இல்லை என்றார். இமான் அண்ணாச்சியும், என்னிடம் சொல்லு. யாரிடமாவது மனதில் உள்ளதை சொன்னால் தான் மனதில் உள்ள பாரம் குறையும் என்றார். பாவனியும், இல்லை. அவர் வெளிநாட்டில் இருக்கிறார். ஒருநாள் திரும்பி வருவார் என நம்பிக் கொண்டிருக்கிறேன் என்றார்.

அவ்வளவு தான் அவர் சிங்கப்பூரில் இருக்கிறார் என நினைத்துக் கொள். ஒருவேளை உன் வாழ்க்கையில் வேறு ஒருவர் வரலாம் என்கிறார் அண்ணாச்சி. பாவனியும், இல்லை ஏற்கனவே வந்தார்கள். அவரையும் அவர் தான் இவர் என நம்பினேன். ஆனால் அது நடக்காமல் போனது என கண்கலங்குகிறார்.

அவரிடம் நான் முன்பே சொன்னேன். நீ இல்லா விட்டால் நான் தெருவில் நாய் போல் தான் திரிய வேண்டி இருக்கும் என அவரிடமே சொன்னேன். அக்கா இருவருக்கும் திருமணமாகி குடும்பம் உள்ளது. அப்பா, அம்மா எத்தனை நாளைக்கென்று தெரியாது. அதற்கு பிறகு எப்போதும் தனியாகி விடுவேனோ என பயமாக உள்ளது. தனியாக இருக்கும் போது இந்த எண்ணம் அடிக்கடி வருகிறது என்கிறார் பாவனி.

உடனடியாக டென்ஷனாகும் அண்ணாச்சி, அப்படியானால் நாங்கள் எல்லாம் இல்லையா. அன்றைக்கு நான் எங்க இருந்தாலும் அண்ணாச்சி ஓடி வந்து சிரிக்க வைப்பார் என சொல்லும் போது எனக்கு எவ்வளவு பெருமையாக இருந்தது தெரியுமா. இந்த நேரம் உன்னை எத்தனை கோடி பேர் கொண்டாடி கொண்டிருப்பார்கள் தெரியுமா. அதனால் எப்போதும் அண்ணன் நான் இருக்கிறேன். உன்னை கடவுள் இத்தனை பேருடன் இருக்க வைத்திருக்கிறார். கருப்பான அண்ணன் உனக்கு கிடைத்துள்ளார் என நினைத்துக் கொள் என்கிறார்.

8 வயசு.. அப்பா இறந்துட்டாருன்னு தெரியாம எழுப்பினேன்.. அவருதான் என் ஹீரோ.. கண்ணீர் விட்ட அக்ஷரா! 8 வயசு.. அப்பா இறந்துட்டாருன்னு தெரியாம எழுப்பினேன்.. அவருதான் என் ஹீரோ.. கண்ணீர் விட்ட அக்ஷரா!

இதை கேட்டு சிரிக்கும் பாவனி, எனக்கு இப்படி வயதான அண்ணனா. பரவாயில்லை கொஞ்சம் வயதான அண்ணன். உங்களுக்கு இப்படி ஒரு இளமையான தங்கை கிடைத்துள்ளாள் என நினைத்துக் கொள்ளுங்கள். நன்றி அண்ணய்யா என்றார்.

English summary

Bigg boss tamil season 5 today episode shows that imman annachi talking with pawani reddy. she crying about her lonelyness. but annachi said that he is like her brother. he always stay with her.pawani smiled and accepted his as brother.

Story first published: Wednesday, October 13, 2021, 23:53 [IST]Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

11 இளைஞர்கள் கடத்தல்; கரன்னகொட மீதான குற்றச்சாட்டுகள் கைவிடப்பட்டன - லங்கா உண்மை | சிங்களம்

Wed Oct 13 , 2021
11 இளைஞர்கள் கடத்தல் மற்றும் காணாமல் போனது தொடர்பாக கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் பெஞ்சில் முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னகொடவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை சட்டமா அதிபர் சோபித ராஜகருணா மற்றும் தம்மிகா கணேபோல இன்று (ஜன. 13) தள்ளுபடி செய்தனர். மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் முன் அறிவிக்கப்பட்டது. 2008 ஆம் ஆண்டில் கடத்தல்கள் பதிவாகியுள்ளன மற்றும் கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் 11 […]

You May Like

Breaking News

Translate »