ஊடகங்களில் வெளிவரும் வீடியோ: சிவகுமார் மறுப்பு| Dinamalar


பெங்களூரு,:”ஒழுங்கான கட்சி காங்கிரஸ். ஊடகங்களில் வெளிவரும் வீடியோவுக்கும் எனக்கும், காங்கிரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை. நான் எந்த கமிஷனும் பெறவில்லை. அந்த அவசியமும் எனக்கு இல்லை,” என மாநில காங்கிரஸ் தலைவர் சிவகுமார் விளக்கம் அளித்தா

ர்.மாநில காங்கிரஸ் தலைவர் சிவகுமார் கமிஷன் பெறுவது குறித்து, முன்னாள் எம்.பி., உக்ரப்பா, ஊடக ஒருங்கிணைப்பாளர் சலீம் ஆகியோர் பேசியது ஊடகங்களில் வௌியாகி சலசலப்பை ஏற்படுத்தியது.இந்நிலையில், பெங்களூரு குயின்ஸ் சாலையில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஒழுக்கமான கட்சி காங்கிரஸ். ஊடகங்களில் வெளிவரும் வீடியோவுக்கும், எனக்கும், காங்கிரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை.நான் எந்த கமிஷனும் பெறவில்லை. அத்தகைய விஷயத்தில் நான் ஈடுபடவில்லை. அந்த அவசியமும் எனக்கு இல்லை. இந்த வீடியோவால் கட்சிக்கு அவப்பெயர் ஏற்பட்டிருப்பது உண்மை.

இதற்கு முன், எடியூரப்பாவும், அனந்தகுமாரும் ரகசியமாக பேசிகொண்டிருந்த வீடியோ; பா.ஜ., அமைச்சர் படுக்கை அறை வீடியோ; பா.ஜ.,வின் விஸ்வநாத், பசனகவுடா பாட்டீல் எத்னால் ஆகியோர் பேசிய வீடியோக்களையும் ஊடகங்கள் வெளியிட்டன.

அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது குறித்து உள்துறை அமைச்சர் சுயமாக வழக்கு பதிவு செய்து கொண்டு விசாரணை நடத்தலாம்.அரசியலில், கை தட்டுப்பவர்கள், செருப்பு வீசுவோர், ஆதரவு கோஷம் எழுப்புவோர், கற்கள் வீசுவோர், முட்டை வீசுவோர், எதிர் கோஷம் போடுவோர் என பல தரப்பினர் கட்சியினுள் இருப்பர்.இவ்வாறு அவர் கூறினார்.

AdvertisementSource link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

அண்ணன் நான் இருக்கேன்... பாவனிக்கு ஆறுதல் சொல்லும் இமான் அண்ணாச்சி | Imman Annachi give positive vibe to Pawani Reddy

Wed Oct 13 , 2021
News oi-Mohana Priya S | Published: Wednesday, October 13, 2021, 23:53 [IST] சென்னை : பிக்பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியின் பத்தாம் நாளான இன்று மீதமுள்ள போட்டியாளர்கள் தங்களின் வாழ்க்கையை பற்றி சொல்லும் பகுதி நடைபெற்றது. இன்று அபிஷேக் ராஜா, தாமரை செல்வி, வருண் உள்ளிட்டோர் தங்களின் வாழ்க்கை கதையை கூறினார்கள். இதில் தாமரை செல்வியின் கதையை கேட்டு ஹவுஸ்மெட்கள் அனைவரும் கண்கலங்கினர். அனைவரும் […]

You May Like

Breaking News

Translate »