Lakshmi menon to act in female generic movie


லட்சுமி மேனன் கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்ட இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழ் மற்றும் மலையாளத் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

முதன்முதலாக மலையாளத்தில் வெளிவந்த ‘ரகுவிண்டெ சுவந்தம் ரசியா’ (2011) என்ற திரைப்படத்தில் நடித்தார். வணிகரீதியான வெற்றியைத் தேடித்தந்த,கும்கி மற்றும் சுந்தர பாண்டியன் திரைப்படங்களில் நடித்ததன் மூலம் திரையுலகம் அவரை திரும்பி பார்த்தது.

2014-ம் ஆண்டு வெளியான ‘நான் சிகப்பு’ மனிதன் படத்தில் நடிகர் விஷாலுடன் உதட்டு முத்தக்காட்சியில் நடித்து பரபரப்பை கூட்டினார்.சுந்தரபாண்டியன், பாண்டியநாடு, நான் சிவப்பு மனிதன், மஞ்சப்பை, வேதாளம், மிருதன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கிறார்.2016-ல் விஜய் சேதுபதியுடன் ‘றெக்க’ படத்தில் நடித்த பிறகு இவரை திரைப்படங்களில் பார்க்க முடியவில்லை.  பின்னர் விக்ரம் பிரபுவுடன் ‘புலிக்குத்தி பாண்டி’ படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்த அவர், தற்போது ‘ஏஜிபி‘ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இது திகில் கதையம்சம் கொண்ட படம்.

lakshmi

இதுவரை காதல்,காமெடி,ஆக்‌ஷன் போன்ற கமர்ஷியல் படங்களில் மட்டுமே நடித்து வந்த நடிகை லட்சுமி மேனன், தற்போது முதல் முறையாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் இந்த படத்தில் சவாலான மனநோயாளி கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கிறார். இந்த படத்தை ரமேஷ் சுப்பிரமணியன் இயக்க உள்ளார்.

நயன்தாரா, திரிஷா, ஐஸ்வர்யா ராஜேஷ், கீர்த்தி சுரேஷ் போன்ற நடிகைகள் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து முன்னணி நடிகைகளாக உயர்ந்துள்ளதால், தற்போது லட்சுமி மேனனும் அந்த பாணிக்கு மாறியுள்ளதாக சினிமா வட்டாரங்களில் சிலபல பேச்சுக்கள் எழுந்துள்ளன.

ALSO READ 12 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் விஜய் – பிரகாஷ்ராஜ் கூட்டணி!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

சாப்பிட சொல்லி தாயை அடித்து கொன்ற மகன்

Wed Oct 13 , 2021
பெரம்பூர்: கொடுங்கையூர் எம்.ஆர்.நகர் முதல் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் அம்சா(64). இவர் தனது மகன் சதீஷ்குமார்(36), குடிபோதைக்கு அடிமையானவர். இந்நிலையில், கடந்த 10ம் தேதி மதுபோதையில் வீட்டுக்கு வந்த சதீஷ்குமார் தனது தாயை சாப்பிட சொல்லி வற்புறுத்தி உள்ளார். ஆனால் அவர் தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி சாப்பாடு வேண்டாம் எனக் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சதீஷ்குமார் தனது தாய் அம்சாவை அடித்ததாக கூறப்படுகிறது. இதில் மயக்கம் […]

You May Like

Breaking News

Translate »