குமாரசாமிக்கு, முன்னாள் முதல்வர் எடியூரப்பா பதிலடி| Dinamalar


பெங்களூரு:”என் பிறந்த நாள் நிகழ்ச்சியில் சித்தராமையாவை சந்தித்தது தான். அதற்கு பின் அவரை சந்திக்கவில்லை. அதற்கான தேவையும் இல்லை,” என குமாரசாமிக்கு, முன்னாள் முதல்வர் எடியூரப்பா பதிலடி கொடுத்தார்.

பா.ஜ.,வை சேர்ந்த முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் ஆதரவாளர், அவரது மகன் விஜயேந்திராவின் ஆதரவாளர்கள் உட்பட பலர் மீது வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி, கணக்கில் காட்டப்படாத, 750 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள், சொத்து ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.இதற்கு, எடியூரப்பாவை, சித்தராமையா சந்தித்தது தான் முக்கிய காரணம் என்று, ம.ஜ.த.,வை சேர்ந்த முன்னாள் முதல்வர் குமாரசாமி குற்றம் சாட்டியிருந்தார்.

இதற்கு பதிலளித்து, எடியூரப்பா வெளியிட்ட அறிக்கை:எனது பிறந்த நாள் நிகழ்ச்சியில், கடந்த, 2020, பிப்ரவரி, 27ல், சித்தராமையா என்னை சந்தித்தார். அதன் பின் சந்திக்கவில்லை. அதற்கான தேவையும் இல்லை.மாநிலத்தில் பா.ஜ.,வை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வரும் வகையில் செயல்பட்டு வருகிறோம். இலக்கை எட்டும் வகை ஓய்வு பெற மாட்டேன். நம்பிய கொள்கைக்கு விரோதமாக நடந்து கொண்டதில்லை. சமரசம் செய்து கொள்ளவும் மாட்டேன்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளார்.

AdvertisementSource link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

சினேகாவை என்னம்மா வாழ்த்தி இருக்கார் பிரசன்னா... பொறாமைப்படும் பெண்கள் | Prasanna's marvelous wish to Sneha rounds in internet

Wed Oct 13 , 2021
டாப் ஹீரோயினான சினேகா தமிழில் மாதவனுக்கு ஜோடியாக என்னவளே படத்தில் நடித்து, கோலிவுட்டிற்குள் என்ட்ரி ஆனார். பிறகு கமல், விஜய், நாகர்ஜுனா, வெங்கடேஷ், பிரசாந்த், தனுஷ், சிலம்பரசன் உள்ளிட்ட பல டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து டாப் ஹீரோயின் ஆனார். தென்னிந்திய மொழி ரசிகர்களை கவர்ந்து, தனக்கென தனி ரசிகர்க கூட்டத்தை உருவாக்கினார். பிரசன்னாவுடன் காதல் 2009 ம் ஆண்டு அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் நடித்த போது பிரசன்னாவை சந்தித்தார் […]

You May Like

Breaking News

Translate »