இரவு நேரத்தில் ஜோர்!| Dinamalar


இரவு நேரத்தில் ஜோர்!

உலகளவில் தொற்று பாதிப்பு பலரையும் மிரள வைத்ததில் நம்ம ஸ்டேட்டும் அதிர்ந்தது. இதனால் கட்டுப்பாட்டு விதிமுறைகளை மாநில அரசு கொண்டு வந்தது. இப்போது பீதி ஓரளவுக்கு ஒடுக்கியுள்ளது. ஒரு வழியாக ஊரடங்கையும் தளர்த்திட்டாங்க. ஆனாலும், இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்குது. நள்ளிரவிலும் ஜாலி ரவுண்ட்ஸ் இருந்தவாறே இருக்குது. போதைக்காரங்க அட்டகாசம் பூங்கா நகரில் தள்ளாட வைக்குதாம். கவனிக்க வேண்டியவங்க கொரட்டை சப்தம் தான் ஜோரா கேட்குது.

ஆம் ஆத்மி வக்கீலிடம் வழக்கு!

ஆபாச வீடியோ காட்சியால் மந்திரி ஜார்கிஹோளியை பதவி இழக்க வெச்ச பெண் பற்றிய விபரம் அடக்கி வாசிக்கப்படுகிறது.பாலியல் பலாத்கார வழக்கில் அந்த பெண்ணின் வக்கீல் ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்து விட்டார். இவர் தம் செல்வாக்கை உயர்த்திக்கொள்ள மேலும் பிரபலத்தை எதிர்பார்க்கிறார். இதற்கு சரியான இடமாக அரசியல் கட்சி இவருக்கு தேவைப்பட்டது.அதனால், அரசியல் கட்சியின் சட்டப்பிரிவு பொறுப்பு கேட்டுள்ளார். அது கிடைக்க போகுதாம்.

ஓட்டு வங்கிக்கு வேட்டு!

சிந்தகி தொகுதியில் புல்லுக்கட்டு அசம்பிளிக்காரரோட மகனை கைகாரங்க இழுத்துக் கொண்டாங்க. வேட்பாளராக களத்தில் இறக்கிட்டாங்க.சிந்தகி தொகுதியின் வெற்றியின் அடித்தளமே சிறுபான்மையின் முஸ்லிம், பெரும்பான்மையான லிங்காயத்தும் அதிகமாக இருக்காங்க. இவங்க தான் வெற்றியை நிர்ணயிக்றவங்க என்பதாலே, புல்லுகக்கட்டுக்காரங்க சிறுபான்மையினரை தேர்தலில் போட்டியிட ‘சீட்’ கொடுத்திருக்காங்க.பூக்கட்சி ஜெயித்தாலும் ஜெயிக்கட்டும். ஆனால், கை காரங்க தோற்கும் என்பதால் கை காரங்களோட ஓட்டு வங்கியை தகர்க்குறாங்களாம்.

AdvertisementSource link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

தவறாக நினைத்த மகன்.. என் வாழ்க்கை மாதிரி எந்த பொண்ணோட வாழ்க்கையும் ஆகிடக் கூடாது.. கதறிய தாமரை! | Bigg boss Tamil 5: Thamarai Selvi shares her story in Biggboss house

Wed Oct 13 , 2021
நாங்க 5 பேரு பிள்ளைங்க இந்நிலையில் இன்றைய எபிசோடில், நாடக் கலைஞரான தாமரை செல்வி தனது கதையை பகிர்ந்து கொண்டார். அவர் பேசியதாவது, புதுக்கோட்டை மாவட்டம் தொண்டைமான் அருகே உள்ள ஏமாத்தூர் கிராமம் தான் என் சொந்த ஊரு. கஷ்டப்படுற குடும்பம் தான். நாங்க 5 பேரு பிள்ளைங்க. சாப்பாடு இல்லாம ரொம்ப கஷ்டப்பட்டோம் அப்பா எப்போவும் சண்டை போட்டுக்கிட்டே இருப்பார். வீட்டில் எப்போவும் சண்டைதான் நடக்கும். அம்மாவை பெத்த […]

You May Like

Breaking News

Translate »