அமித் ஷா தலைமையில் பா.ஜ., வார் ரூம் கூட்டம்| Dinamalar


புதுடில்லி:அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் ஐந்து மாநில சட்டசபை தேர்தல் குறித்து விவாதிக்க, உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில், பா.ஜ., ‘வார் ரூம்’ கூட்டம் டில்லியில் நடைபெற்றது.
பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்தரகண்ட் மற்றும் உத்தர பிரதேச சட்டசபை தேர்தல்கள் அடுத்த ஆண்டு நடக்க உள்ளன.

வெற்றி

இதில், பஞ்சாபை தவிர மற்ற நான்கு மாநிலங்களில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. ‘இதில், மூன்று மாநிலங்களில் சிரமம் இன்றி பா.ஜ., வெற்றி பெற்றுவிடும்’ என, அக்கட்சி நம்பிக்கையுடன் உள்ளது. உ.பி.,யில் போட்டி பலமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த நேரத்தில் லக்கிம்பூர் வன்முறை சம்பவம், பா.ஜ., அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

உ.பி.,யை சேர்ந்த பா.ஜ., மூத்த தலைவர்கள் சிலர், அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை டில்லியில் சமீபத்தில் சந்தித்தனர். நான்கு மணி நேரம் நடைபெற்ற கூட்டத்தில், லக்கிம்பூர் வன்முறை சம்பவத்தால் கட்சிக்கு ஏற்பட்டுள்ள அவப்பெயர் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

பிரசாரம்

உ.பி.,யில் 100 நாட்களில் 100 நிகழ்ச்சிகளை நடத்த பா.ஜ., தலைமை திட்டமிட்டுள்ளது. பல்வேறு சமூக மக்களை கவர, பொது கூட்டங்கள், வீடு வீடாக சென்று பிரசாரம், இளைஞர் மாநாடுகள் நடத்த திட்டமிடப்பட்டுஉள்ளது.இந்நிலையில், முக்கிய கட்சி விவகாரங்கள் குறித்து விவாதித்து உடனுக்குடன் முடிவெடுக்க, டில்லியில் பா.ஜ.,வுக்கு ‘வார் ரூம்’ எனப்படும் அவசர கட்டளை அலுவலகம் உள்ளது.

இங்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், ஐந்து மாநில சட்டசபை தேர்தல் குறித்து முக்கிய விவாதம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

AdvertisementSource link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

சொந்த ஸ்டோரி சொல்ல சென்னா.. துப்பாக்கி விஜய் மொட்டை மாடி சீன் சொல்றாப்ல.. ட்ரோலாகும் அபிஷேக்! | Bigg boss Tamil 5: Netizens trolls Abhishek Raja for his story

Wed Oct 13 , 2021
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனது ஸ்டோரியை கூறிய அபிஷேக்கை ட்ரோலாக்கி வருகின்றனர் நெட்டிசன்கள். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றும் ஒரு கதை சொல்லட்டுமா டாஸ்க்கே நடைபெற்றது. இதில் அபிஷேக் ராஜா தான் கடந்து வந்த பாதையை பகிர்ந்து கொண்டார். தனது அப்பா வாங்கி வைத்த கடனை 2 வருடத்தில் உழைத்து சரிக்கட்டியதாக கூறினார் அபிஷேக் ராஜா. அபிஷேக் ராஜா பேசியதை பார்த்த நெட்டிசன்கள் அவரை கிண்டலடித்து வருகின்றனர். கோலிவுட் தகவல்களை சுடச்சுட […]

You May Like

Breaking News

Translate »