அவர்களும் குழம்பி, நாட்டு மக்களையும் குழப்பிக் கொண்டிருக்கின்றனர் என்று சொல்லுங்கள்!| Dinamalar


பா.ஜ., தேசிய செயற்குழு சிறப்பு அழைப்பாளர் நடிகை குஷ்பூ அறிக்கை: பிரதமர் மோடி, 8,000 கோடி ரூபாய்க்கு இரண்டு விமானங்கள் வாங்கியுள்ளார் என காங்., முன்னாள் தலைவர் ராகுல் குற்றம் சாட்டியுள்ளார். அவர் சகோதரி பிரியங்கா, 16 கோடி ரூபாயில் வாங்கியுள்ளார் என்கிறார். குழப்பமானவர்கள் இருக்கும் குழப்பமான கட்சியாக காங்கிரஸ் விளங்குகிறது.

அவர்களும் குழம்பி, நாட்டு மக்களையும் குழப்பிக் கொண்டிருக்கின்றனர் என்று சொல்லுங்கள்!

தமிழக காங்., – எம்.பி., கார்த்தி சிதம்பரம் அறிக்கை: விளையாட்டில் சூதாட்டம் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட வேண்டும். அதை ஒழுங்குபடுத்த வேண்டும். வரி விதிப்புக்கும் உள்ளாக்கப்பட வேண்டும்.

இந்த கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறீர்களே… மறைமுக திட்டம் ஏதும் உள்ளதா?

அ.தி.மு.க., முன்னாள் கூட்டுறவுத்துறை அமைச்சர் ராஜு பேச்சு: சட்டசபை தேர்தலில் சரியானபடி வியூகம் வகுக்காததால், எதிர்க்கட்சியாக உள்ளோம். இன்றைய தலைமையை நம்பி கட்சி இல்லை; தொண்டரை நம்பி தான் கட்சி உள்ளது.

சமீப காலமாக உங்களின் பேச்சு, கட்சியினருக்கு ரொம்ப, ‘டவுட்புல்’லாகவே இருக்கிறது. பத்தாண்டுகளாக அமைச்சராக இருந்தவர் இப்படி கட்சியினரை பதைபதைக்கச் செய்யலாமா?

தமிழக பா.ஜ., பொறுப்பாளர் சி.டி.ரவி அறிக்கை: ஜம்மு – காஷ்மீரின் பூஞ்ச், எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில், பாகிஸ்தான் பயங்கரவாதிகளால் நம் வீரர்கள் ஐந்து பேர் சுட்டு கொல்லப்பட்டதை அறிந்து, வேதனை அடைந்தேன். பயங்கரவாதிகளுக்கு நம் வீரர்கள் தக்க பதிலடி கொடுப்பர்.

latest tamil news

நம் வீரர்களின் உயிர் தியாகம் விலை மதிப்பற்றது. அன்னிய கைக்கூலிகளின் ஆட்டத்தை, மோடி அரசு முடிவுக்கு கொண்டு வர வேண்டும்

தமிழக முதல்வர் ஸ்டாலின் பேச்சு: பள்ளி, கல்லுாரிக் காலங்களில் ‘முரசொலி’ நாளிதழில் வேலை பார்ப்பதை வழக்கமாக கொண்டிருந்தேன். இதழ்களை வெளியூர்களுக்கு அனுப்பி வைக்கும் பொறுப்பை நான் ஏற்றிருந்தேன். ஆகையால் நான் பத்திரிகையாளராக இந்த நிகழ்ச்சிக்கு வந்துள்ளேன்.

பத்திரிகையாளர் என சொல்லிக் கொள்வதில், முதல்வருக்கே விருப்பம் உள்ளதே!

தமிழக பால் வளத்துறை அமைச்சர் நாசர் பேச்சு: இந்தியாவிலேயே கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்திய பெருமை, நம் முதல்வர் ஸ்டாலினைத் தான் சேரும்.

தமிழகம் தாண்டி நம் முதல்வர், டில்லி தவிர, பக்கத்து மாநிலம் கூட செல்லவில்லை. பிறகு எப்படி, இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்தினார் என்பதை நீங்கள் தான் விளக்க வேண்டும்!Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

வாவ்.. வாட் எ கோரியோகிராஃபி.. டிக்கிலோனா பாடலுக்கு இந்த குட்டீஸ் போட்ட ஆட்டத்த பாருங்க! | Kids dance for Dikkiloona song video goes viral on social media

Wed Oct 13 , 2021
ஏற்கனவே ட்ரைலர் வெளியீடு மேலும் இந்தப் படத்தில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், யோகி பாபு, ஆனந்த்ராஜ், முனிஷ்காந்த, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். கமல் பாடல் ரீமிக்ஸ் இந்தப் படம் கடந்த செப்டம்பர் 10ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஓடிடி தளமான ஜீ 5 தளத்தில் ரிலீஸ் ஆனது. இந்நிலையில் இந்தப் படத்தில் மைக்கேல் மதன காமராஜன் படத்தில் […]

You May Like

Breaking News

Translate »