ஏற்றி விடும் ஏணிகளை எட்டி உதைக்கிறாரா அந்த இளம் நடிகர்? திடீரென அந்த இயக்குநர் இப்படி புலம்புறாரே? | Young Mass actor says no to his blockbuster movie second part due to some clash


இளம் மாஸ் ஹீரோ

இளம் மாஸ் ஹீரோ

சின்னத்திரையில் இருந்து இவரும் சினிமாவுக்கு வந்து கொடிகட்டி பறந்து கொண்டிருக்கிறார். முன்னணி ஹீரோவாக மாறிய இவர் சினிமாவில் பல பிசினஸ்களை கவனித்துக் கொண்டு வெற்றி நடை போட்டு வருகிறார். இவர் நடிக்கும் படங்கள் வசூல் ரீதியாக நல்ல ஓப்பனிங் கொடுத்து வரும் நிலையில் திரையுலகம் இவரை கொண்டாடி வருகிறது.

ஏணிகளை எட்டி உதைத்து

ஏணிகளை எட்டி உதைத்து

பொதுவாக சினிமாவில் இந்த பிரச்சனை சர்வ சாதாரண ஒன்றாகத் தான் இதுவரை பார்க்கப்பட்டு வருகிறது. ஏற்றிவிடும் ஏணிகளை உச்சத்துக்கு சென்ற பின்னர் எளிதாக எட்டி உதைத்து தள்ளிவிடும் வழக்கத்தை இந்த இளம் மாஸ் நடிகரும் பழக்கமாக கொண்டு இருக்கிறார் என்கிற குற்றச்சாட்டுகளும் எழுந்த வண்ணமே உள்ளன.

ஒல்லி நடிகருடன் பஞ்சாயத்து

ஒல்லி நடிகருடன் பஞ்சாயத்து

சின்னத்திரையில் கலக்கிக் கொண்டிருந்த இவரை சினிமாவுக்கு அழைத்து வந்து அழகு பார்த்த அந்த ஒல்லி நடிகருடன் ஆரம்பத்திலேயே பஞ்சாயத்து பண்ணி விட்டு சுதந்திர பறவையாக வெளியேறினார் அந்த இளம் ஹீரோ. ஒல்லி நடிகருடன் மட்டுமின்றி பல தயாரிப்பாளர்களிடமும் சண்டை தானாம்.

தனியாக தயாரிப்பு

தனியாக தயாரிப்பு

தயாரிப்பாளர்கள் தான் கேட்கும் சம்பளத்தை தர மறுக்கின்றனர் என்றும், தனது நடிப்பால் படம் நல்லா ஓடும் போது கேட்கும் சம்பளத்தை தர மறுக்கின்றனர் என்கிற பிரச்சனையை கிளப்பி தனியாக சொந்த தயாரிப்பையே தொடங்கினார். ஆனால், தொடர்ந்து பல படங்கள் பல்பு வாங்கிய நிலையில், ஏகப்பட்ட கடனில் சிக்கித் தவிப்பதாக தகவல்கள் கசிந்து அவரது நிலைமையை கோடம்பாக்கத்துக்கு உணர்த்தியது.

இரண்டாம் பாகம் பிரச்சனை

இரண்டாம் பாகம் பிரச்சனை

இந்நிலையில், மாஸ் நடிகர் நடிப்பில் பெரும் வெற்றியை பெற்ற அந்த இரண்டாம் பாகத்தில் மீண்டும் அவரை நடிக்க வைக்க இயக்குநர் அணுகிய நிலையில், ஏற்கனவே அவர் இயக்கத்தில் வெளியான அந்த பெரிய படம் படு தோல்வி அடைந்ததும் உங்க சங்காத்தமே வேண்டாம் என ஒதுங்கிய நடிகர் இயக்குநரின் இரண்டாம் பாக கோரிக்கையை அதிரடியாக மறுத்து விட்டாராம்.

புது முகம்

புது முகம்

நடிகருடன் நடந்த பிரச்சனையை வெளியே சொல்லிக் கொள்ள விரும்பாத அந்த இயக்குநர் புதிய நடிகருடன் அந்த இரண்டாம் பாகத்தை தொடங்கப் போவதாக கூறி வருகிறார். இளம் மாஸ் ஹீரோவை தவிர வேறு யார் நடித்தாலும் அந்த படம் நல்லா இருக்காது என்பது ரசிகர்களின் கருத்தாக உள்ளது.Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மேடவாச்சியாவில் 100 ஏக்கர் கொஹோம்பா இருப்பு அழிக்கப்பட்டது - லங்கா உண்மை | சிங்களம்

Thu Oct 7 , 2021
மேடவாச்சியாவில் உள்ள 40 ஆண்டுகள் பழமையான ஒரே இருப்பு மரம் கடத்தல்காரர்கள் மற்றும் வணிகர்களால் அழிக்கப்பட்டுள்ளதாக மேடவாச்சியாவில் வசிப்பவர்கள் கூறுகின்றனர். இது மேடவாச்சியா வால்போலா ரிசர்வ் பகுதியைச் சேர்ந்த ஒரு தோட்டமாகும், இது கட்டுகுவ தம்புவேவா கோணகும்புகொல்லேவா கிராமத்தில் அமைந்துள்ளது. பல ஆண்டுகளாக இந்த இருப்பு அவ்வப்போது அழிக்கப்பட்டு, கிராம மக்களின் தலையீட்டால் அதை நிறுத்த முடிந்தது. தோற்கடிக்கப்பட்ட பிரதேச சபை வேட்பாளர் ஒருவர் சுமார் ஒரு வருடமாக மேடவாச்சியா […]

You May Like

Breaking News

Translate »