உங்க பஞ்சாயத்து ஓவர்.. என் பஞ்சாயத்து இன்னும் முடியலையே.. பூகம்பத்தை கிளப்பிய பாஸ் நடிகர்! | Boss actor remains silent on his big budget movie over this unsettled issue


சண்டையிட்டு சமாதானம்

சண்டையிட்டு சமாதானம்

பல கோடிகளை செலவழித்த நிலையில், இயக்குநருடன் மோதலில் இறங்கிய தயாரிப்பு தரப்பு எப்படி முட்டி மோதினாலும் பலன் இல்லை என்பதை புரிந்து கொண்டு சண்டையிட்டது போதும் வெள்ளைக் கொடிக்கு வேலை வந்து விட்டது என சரண்டர் ஆகி சமாதானம் ஆகி விட்டது.

இரட்டை குதிரை சவாரி

இரட்டை குதிரை சவாரி

ஆனது ஆச்சு.. போனது போச்சு என மீண்டும் அந்த படத்தை இயக்க ஓகே சொன்ன இயக்குநர் இன்னொரு படத்திலும் கமீட் ஆகி உள்ள நிலையில், ஒரே நேரத்தில் இரண்டு பிரம்மாண்ட குதிரைகளிலும் சவாரி செய்து விடலாம் என்கிற முடிவுக்கு வந்து விட்டார். ஆனால், முக்கியமான அந்த முன்னணி நடிகர் திடீரென முரண்டு பிடிப்பதால் புதிய சிக்கல் உருவாகி உள்ளது.

என்னோட பஞ்சாயத்து

என்னோட பஞ்சாயத்து

பாஸ் நடிகர் ஏற்கனவே சில படங்களை அந்த தயாரிப்பு நிறுவனத்துக்கு நடித்துக் கொடுப்பதாக வாங்கிய பணம் எல்லாம் செலவு ஆன நிலையில், உங்க பஞ்சாயத்து முடிந்து விட்டது. என்னோட பஞ்சாயத்து இன்னமும் செட்டில் ஆகவில்லையே அப்புறம் நான் எப்படி வந்து நடிப்பது என பெரிய பூகம்பத்தை கிளப்பி உள்ளாராம்.

பெரிய நஷ்டம்

பெரிய நஷ்டம்

இந்த நடிகரை நம்பி வந்த தயாரிப்பு நிறுவனத்துக்கு ஏற்கனவே பல கோடிகள் நஷ்டமான நிலையில், மீண்டும் தாமதம் ஆனால், மேலும் பல கோடிகள் நஷ்டத்தை சந்திக்க நேரிடும் என்பதால் நடிகருடனும் சுமூக செட்டில்மென்ட்டை செய்ய வேண்டிய நிலை உருவாகி உள்ளது. அதற்காகத் தான் இந்த விவகாரத்தில் இதுவரை அந்த பாஸ் நடிகர் அமைதி காத்து வருகிறாராம்.

ரொம்ப லேட்டாகும்

ரொம்ப லேட்டாகும்

ஒதுக்கிய தேதிகள் எல்லாம் முடிந்து விட்ட நிலையில், மீண்டும் அந்த படத்திற்காக தேதிகளை ஒதுக்க ரொம்ப லேட்டாகும் என்றும், அந்த பண விவகாரத்தை முடித்துக் கொண்டால் பார்க்கலாம் என்றும் நடிகர் டீல் பேசி வருவதால் என்ன செய்வதென்றே தெரியாமல் தயாரிப்பு நிறுவனம் விழி பிதுங்கி உள்ளதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

SLT-MOBITEL | எல்எம்டி

Thu Sep 23 , 2021
‘ஃபைபர் ஃபார் தி நேஷன்’ மூலம் ஃபைபர் தொழில்நுட்பத்தின் சக்தியை வெளிப்படுத்துகிறது உலகம் முன்பை விட பல வழிகளில் டிஜிட்டல் முறையில் இணைக்கப்பட்டுள்ளது, மேலும் தொழில்நுட்பம் எல்லாம். நாடுகளும் சமூகங்களும் அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் அதிவேக இணைப்புடன் வளர்ச்சியின் மிக முக்கியமான கூறுகளில் ஒன்றாக இருப்பதன் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கின்றன; குறிப்பாக வளர்ந்து வரும் டிஜிட்டல் பொருளாதாரம் வளர்ச்சி, சுகாதாரம் மற்றும் கல்வி ஆகியவற்றை மேம்படுத்துவதற்கு மிகவும் முக்கியமானது. SLT-MOBITEL தேசிய […]

You May Like

Breaking News

Translate »