ஐ.நா பொதுச்சபை கூட்டத்தில் புதன்கிழமை ஜனாதிபதி உரை நிகழ்த்தவுள்ளார்


Published by T. Saranya on 2021-09-18 18:12:04

(நா.தனுஜா)

ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று சனிக்கிழமை அதிகாலை அமெரிக்காவிற்குப் பயணமானார்.

ஐக்கிய நாடுகள் சபையின் 76 வது பொதுச்சபைக்கூட்டம் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தலைமையில் தலைநகர் நியூயோர்க்கில் எதிர்வரும் செவ்வாய்கிழமை (21 ஆம் திகதி) ஆரம்பமாகின்றது.

‘கொவிட் – 19 வைரஸ் தொற்றுப்பரவலில் இருந்து மீள்வதற்கான நம்பிக்கையின் மூலம் நெகிழ்ச்சியை மேம்படுத்தல், நிலைபேறானதன்மையை மீளக்கட்டியெழுப்புதல், பூமியின் தேவைகளைக் கவனத்திற்கொள்ளல், மனித உரிமைகளுக்கு மதிப்பளித்தல் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் மறுமலர்ச்சி’ என்ற தொனிப்பொருளில் நடைபெறவுள்ள இம்முறை கூட்டத்தொடரில் உலகநாடுகளின் தலைவர்கள் பலரும் பங்கேற்கவுள்ளனர்.

இந்நிலையில் கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாகப் பதவியேற்றதன் பின்னர், சர்வதேச மாநாடொன்றில் பங்கேற்பதற்காக நாட்டிலிருந்து புறப்பட்டுச்செல்லும் முதலாவது சந்தர்ப்பம் இதுவென்பதுடன் ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக்கூட்டத்தில் அரசதலைவர் என்ற ரீதியில் உரையாற்றவுள்ள முதல் சந்தர்ப்பமும் இதுவாகும்.

அதன்படி எதிர்வரும் புதன்கிழமை (22 ஆம் திகதி) பொதுச்சபைக்கூட்டத்தின் இரண்டாம் நாள் அமர்வில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ உரையாற்றவிருப்பதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

இலங்கை உட்பட ஆறு நாடுகளிலிருந்து திரும்புவோருக்கான நுழைவு தடையை ஜப்பான் நீக்குகிறது

Sat Sep 18 , 2021
எல்லை கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு ஒரு பெரிய மாற்றத்தில், கொரோனா வைரஸின் மிகவும் தொற்றுநோயான டெல்டா மாறுபாடு பரவுவதால் கருப்பு பட்டியலில் உள்ள ஆறு நாடுகளைச் சேர்ந்த அனைத்து திரும்பியவர்களுக்கும் ஜப்பான் திங்கள்கிழமை முதல் மறு நுழைவு அனுமதிக்கும். ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், இந்தியா, மாலத்தீவு, நேபாளம் மற்றும் இலங்கை ஆகிய ஆறு நாடுகளும் தடுப்பூசி போடப்பட்டவர்கள் மற்றும் ஜப்பானில் செல்லுபடியாகும் குடியிருப்பு அந்தஸ்து உள்ளவர்கள் உட்பட வெளிநாட்டினரின் மொத்த நுழைவுத் தடைக்கு […]

You May Like

Breaking News

Translate »