உயிருக்கு அச்சுறுத்தல் பதவியை இராஜினாமா செய்ய போகிறேன் – பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார


Published by T. Saranya on 2021-09-18 16:57:24

(இராஜதுரை ஹஷான்)

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவும், அமைச்சர் காமினி லொகுகேவும் ஒன்றினைந்து என்னை தாக்குகிறார்கள். இதனால் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

ஆகவே உயிரை பாதுகாத்துக் கொள்ள பாதுக்க  பிரதேச அபிவிருத்தி குழு தலைவர் பதவியில் இருந்து விலக தீர்மானித்துள்ளேன். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்தார்.

பொலிஸ் சேவையை அரசியலாக்கும் கீழ்த்தரமான செயற்பாட்டை முன்னெடுக்க வேண்டாம். என அமைச்சர் சரத் வீரசேகரவிடம் பல முறை எடுத்துரைத்தும் அவர் பொருட்படுத்தவில்லை. அரசாங்கத்தில் உள்ள ஒரு சில அமைச்சர்களின் செயற்பாடு வெறுக்கத்தக்கது எனவும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மதுபானக் கடைகளை மீண்டும் திறக்கும் முடிவால் சுகாதார அமைச்சகம் 'குழப்பம்' அடைந்தது ONLANKA செய்திகள்

Sat Sep 18 , 2021
தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு அமலில் இருக்கும் நேரத்தில் மதுக்கடைகளை மீண்டும் திறக்க அனுமதி வழங்குவது கொரோனா வைரஸ் நாவல் வேகமாக பரவுவதற்கு வழிவகுக்கும் என்று சுகாதார அமைச்சகம் கூறுகிறது. கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது பேசிய சுகாதார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் சுகாதார சேவைகள் துணை இயக்குநர் ஜெனரல் டாக்டர் ஹேமந்த ஹேரத், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தவறை மீண்டும் செய்யக்கூடாது. மற்ற அனைத்து கடைகளையும் மூட வேண்டிய கட்டத்தில் […]

You May Like

Breaking News

Translate »