கட்டுநாயக்க – மத்தள விமான நிலையங்களுக்கு சிறப்பு பாதுகாப்பு : மின்னஞ்சல் தகவலால் விசேட நடவடிக்கை


(எம்.எப்.எம்.பஸீர்)

 தாக்குதல் ஒன்று நடாத்தப்படலாம் என கிடைக்கப் பெற்றதாக கூறப்படும் தகவல் ஒன்றுக்கு அமைய, கட்டுநாயக்க – பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் மற்றும் மத்தளை , மஹிந்த ராஜபக்ஷ  சர்வதேச விமான நிலையம் ஆகியவற்றின் பாதுகாப்பு இன்று திடீரென மேலதிக படையினர் கொண்டு பலப்படுத்தப்பட்டது.

நேற்று முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நடவடிக்கையில் 3,108 பேர் கைது | Virakesari .lk

பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் நேற்று (14) இரவு  விமான நிலையத்துக்கு கிடைக்கப் பெற்றதாக கூறப்படும்  மின்னஞ்சல் ஒன்றுக்கு அமைய இந்த விஷேட பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்ப்ட்டதாக அறிய முடிகின்றது.

இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவயிடம் வினவிய போது, அது குறித்த எந்த தகவலும் தன்னிடம் இல்லை எனவும், தேசிய பாதுகாப்புடன் தொடர்புபட்ட விவகாரம் என்பதால்  கிடைக்கும் அனைத்து தகவல்களும் ஊடகப் பேச்சாளருடன் பகிர்ந்துகொள்ளப்பட வாய்ப்பில்லை எனவும் தெரிவித்தார்.

 எவ்வாறயினும் உறுதிப் படுத்தப்படாத தகவல் ஒன்றாக குறித்த தகவல் கிடைக்கப் பெற்றிருப்பினும், முன் கூட்டிய பாதுகாப்பு நடவடிக்கைகளின் நிமித்தம் இவ்வாறு விஷேட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.

இந்த பாதுகாப்பு நடவடிக்கைகளில், விமானப்படையினர் மற்றும் விஷேட பொலிஸ் குழுக்கள் இணைந்து ஈடுபட்டிருந்தனர்.

 இவ்வாறான நிலையில், இலங்கையில் ஐ.எஸ். ஐ.எஸ். மற்றும் தலிபான்களின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட குழுக்கள், நபர்கள் தமது நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான  சந்தர்ப்பம் தொடர்பில்  உடனடியாக அவதானம் செலுத்துமாறு  பொலிஸ் பிரதானிகள், அவர்களின் கீழ் உள்ள உளவுப் பிரிவுகளுக்கு அறிவித்தல் விடுத்துள்ளதாகவும் அறிய முடிகின்றது.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

டி 20 உலகக் கோப்பையை குசால் காணவில்லை என்ற ஆபத்து இல்லை

Wed Sep 15 , 2021
குசால் ஜனித் பெரேரா காயமடைந்திருந்தாலும் டி 20 உலகக் கோப்பையில் இருந்து விலக்கப்படும் அபாயம் இருப்பதாகத் தெரிகிறது. அவர் வெறுமனே தசையை இழுத்திருப்பது மருத்துவ பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது. எனினும், காயமடைந்த லஹிரு மதுஷங்க, உலகக் கோப்பை போட்டியை இழக்க நேரிடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. Source link

You May Like

Breaking News

Translate »