கொழும்பில் தனியார் வைத்தியசாலையில் மீட்கப்பட்ட கைக்குண்டு : திருகோணமலையைச் சேர்ந்த நபர் கைது


(எம்.எப்.எம்.பஸீர்)

 கொழும்பு – நாரஹேன்பிட்டி பகுதியில் உள்ள தனியார் வைத்தியசாலையின் கழிவறையிலிருந்து கைக்குண்டொன்று மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணைகளில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  

 

நாரஹேன்பிட்டி பொலிஸர், கொழும்பு தெற்கு குற்ற விசாரணை பிரிவு ஆகியவற்றுடன் இணைந்து கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினர் முன்னெடுத்த விசாரணைகளில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

கைது செய்யப்பட்டவர்,  திருகோணமலையைச் சேர்ந்தவர் எனவும், அவரே குண்டு தொடர்பில் முதல் தகவலை அளித்துள்ளதாகவும் தெரிவித்த பொலிஸார், முன்னெடுத்த விசாரணைகளில் அவரே குண்டினை குறித்த இடத்துக்கு எடுத்து வந்தமை தொடர்பில் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

 நிர்மாண நடவடிக்கைகளை முன்னெடுக்கும் நிறுவனம் ஒன்றின் ஊழியரான சந்தேக நபர்,  குறித்த வைத்தியசாலையில் முன்னெடுக்கப்படும் நிர்மாணப் பணிகளுக்காக அங்கு கடந்த 12 நாட்களுக்கு முன்னர் வேலைக்கு வந்தவர் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

  இந் நிலையில் குறித்த நபர் குண்டினை எடுத்து வந்த நோக்கம் தொடர்பில் விஷேட விசாரணைகள்  கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் சிறப்புக் குழுவினரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

முன்னதாக குறித்த வைத்தியசாலையின் முதலாம் மாடியிலுள்ள கழிவறையொன்றில்,  வெளிப்புறத்துக்கு தெளிவாக தெரியும் வண்ணம் வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று (14) இந்த குண்டு மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

இலங்கையின் உள் விவகாரங்களில் வெளிநாட்டுக் குறுக்கீடுகளை சீனா எதிர்க்கிறது

Wed Sep 15 , 2021
இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் சக்திவாய்ந்த நாடுகளின் தலையீட்டை எதிர்ப்பதாக சீனா செவ்வாய்க்கிழமை (செப் .14) ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்சிலிடம் கூறியது. 48 வது அமர்வின் UNHRC பொது விவாதத்தில், ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்திற்கான சீனாவின் நிரந்தர பிரதிநிதி, தூதர் சென் சூ, அமெரிக்கா, கனடா, ஐக்கிய இராச்சியம் மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள மனித உரிமை பிரச்சினைகள் குறித்து ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தினார். “இந்த மாநிலங்கள் […]

You May Like

Breaking News

Translate »