சமையல் எரிவாயு  விலையை அதிகரிக்குமாறு நிறுவனங்கள் கோரிக்கை


Published by T. Saranya on 2021-09-15 15:20:10

(எம்.ஆர்.எம்.வசீம்)

சமையல் எரிவாயு  விலையை அதிகரிக்க அனுமதிக்குமாறு சமையல் எரிவாயு  நிறுவனங்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றன. என்றாலும் இதுதொடர்பில் எந்த தீர்மானத்தையும் இதுவரை மேற்கொள்ள வில்லை என நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்  லசந்த அழகியவண்ண தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

உலக சந்தையில் சமையல் எரிவாயு விலை அதிகரித்துள்ளதாக தெரிவித்து சமையல் எரிவாயு இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் விலையை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுத்திருக்கின்றனர். இவர்களின் கோரிக்கை தொடர்பில் இதுவரை நாங்கள் எந்த தீர்மானத்தையும் எடுக்கவில்லை.

எதிர்வரும் தினங்களில் இதுதொடர்பாக நிறுவனங்களுடன் கலந்துரையாட இருக்கின்றோம்.

அதன் பிரகாரம் லாப் நிறுவனத்தின் கோரிக்கைக்கமைய சமையல் எரிவாயு விலையை அதிகரிப்பதற்கு அனுமதித்தால் 12.5 கிலாே கிராம் சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை 2,147 ரூபாவாகவும் 5 கிலாே கிராம் கொண்ட சிலிண்டர் ஒன்றின் விலை 858 ரூபாவாகவும் அதிகரிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பது அரசின் கடமை

Wed Sep 15 , 2021
இலங்கையின் ஐக்கிய நாடுகளின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹனா சிங்கர்-ஹம்டி, கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பது ஒரு அரசின் கடமை என்று ட்வீட் செய்தார். நேற்று (14), தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் – பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திர குமார் பொன்னம்பலம், அனுராதாபுரா சிறையில் இரண்டு தமிழ் அரசியல் கைதிகளை முன் மண்டியிட்டு, அவர்களை அந்த இடத்திலேயே சுட்டுவிடுவதாக மிரட்டினார். பாராளுமன்ற உறுப்பினர் பொன்னம்பலம் கூறுகையில், தமிழ் அரசியல் கைதிகள் “உலகிற்கு […]

You May Like

Breaking News

Translate »