கிளாப் படக்குழுவினரை வியப்பில் ஆழ்த்திய அமிதாப் பச்சன்பிரித்வி ஆதித்யா இயக்கத்தில் ஆதி நடிப்பில் உருவாகி வரும் கிளாப் படத்தின் டீசர் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.

நடிகர் ஆதி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் “கிளாப்”.  இயக்குநர் பிரித்வி ஆதித்யா எழுதி, இயக்கியுள்ள இப்படம், தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டுள்ளது. 

இப்படத்தை தயாரிப்பாளர் ஐ.பி.கார்த்திகேயன் தயாரிக்கிறார். நடிகர் ஆதிக்கு ஜோடியாக, ஆகான்ஷா சிங் நடித்துள்ளார். மேலும் கிரிஷ் குருப், பிரகாஷ் ராஜ், நாசர், மைம் கோபி, முனிஷ்காந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் மாபெரும் வரவேற்பை பெற்றது. 70 நொடிகள் ஓடக்கூடிய இந்த டீசர், அனைத்து கதாபாத்திரங்கள் மற்றும் கதையின் ஆதார உணர்ச்சிகளை சிறப்பாக வெளிப்படுத்தி, ரசிகர்களிடம் பாராட்டை பெற்றிருக்கிறது. 

ஆதி

ஆதி

ஆனால் இந்திய சினிமாவின் சூப்பர்ஸ்டாரான அமிதாப்பச்சன் படத்தின் டீஸரை பாராட்டியுள்ளது படக்குழுவினரை வியப்பில் ஆழ்த்தியதோடு, பெரும் மகிழ்ச்சியையும் தந்துள்ளது. மேலும் நடிகை ஆகான்ஷாவின் திறமையான நடிப்பையும் அவர் குறிப்பிட்டு பாராட்டியுள்ளார். 


https://www.youtube.com/watch?v=videoseriesSource link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் 18-ம் தேதி பவித்ரோற்சவம் தொடக்கம்

Wed Sep 15 , 2021
திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயார் கோயிலில் வரும் 18-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை 3 நாட்களுக்கு வருடாந்திர பவித்ரோற்சவம் நடைபெற உள்ளது. கரோனா நிபந்தனைகள் அமலில் உள்ளதால் இம்முறையும் ஏகாந்தமாக பவித்ரோற்சவ விழாவினை நடத்த திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. ஆனால் இவ்விழாவினில் பக்தர்கள் (இருவர்) ஆன்லைன் மூலம் ரூ. 1001 செலுத்தி டிக்கெட்டினை பெற இயலும். அதன் பின்னர் டிக்கெட் பெற்ற பக்தர்கள் 90 […]

You May Like

Breaking News

Translate »