வவு­னி­யா­வில் உயிரிழந்த 8 பேருக்­குத் தொற்று! – உதயன்


வவு­னி­யா­வில் உயிரிழந்த 8 பேருக்­குத் தொற்று!

வவு­னி­யா­வில் நேற்று தூக்­கில்­தொங்கி உயிர்­மாய்த்­த­வர் உட்­பட உயி­ரி­ழந்த 8 பேருக்­குக் கொரோ­னாத்­தொற்று உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டது. அவர்­க­ளில் மூவர் திடீர் சுக­வீ­னம் கார­ண­மாக வவு­னியா மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­ட­னர். அவர்­க­ளுக்கு மேற்­கொள்­ளப்­பட்ட பி.சி.ஆர். பரி­சோ­த­னை­யில் கொரோ­னாத் தொற்று உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டது. அவர்­கள் மருத்­து­வ­ம­னை­யின் கொரோனா விடு­தி­யில் சேர்க்­கப்­பட்­டி­ருந்த நிலை­யில் நேற்­றுச் சாவ­டைந்­த­னர்.

மற்­றை­ய­வர் வவு­னியா பார­தி­பு­ரம் பகு­தி­யில் நேற்­று­முன்­தி­னம் தூக்­கில் தொங்கி சாவ­டைந்­தார். அவ­ருக்கு மேற்­கொள்­ளப்­பட்ட பரி­சோ­த­னை­யில் கொரோ­னாத் தொற்று உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டது. ஏனைய நால்­வ­ரில், இரு­வர் அவர்­க­ளது வீடு­க­ளில் சுக­வீ­னம் கார­ண­மாக உயி­ரி­ழந்­த­னர். அவர்­க­ளுக்கு மேற்­கொள்­ளப்­பட்ட பரி­சோ­த­னை­யில் கொரோ­னாத்­தொற்று உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டது.

மற்­றைய இரு­வ­ரும் வவு­னியா முதி­ய­வர் காப்­ப­கத்­தில் உயி­ரி­ழந்­த­னர். அந்த முதி­யோர்­க­ளுக்கு மேற்­கொள்­ளப்­பட்ட பரி­சோ­த­னை­யி­லும் கொரோ­னாத் தொற்று உறு­தி­செய்­யப்­பட்­டது.
அத­னை­ய­டுத்து அந்த முதி­யோர் இல்­லம் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­டது.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

வடமேல் மாகாணத்தில் பல இடங்களில் மழை பெய்யும்

Wed Sep 15 , 2021
15 செப்டம்பர் 2021 க்கான வானிலை ஃபாரெகாஸ்ட் சப்ரகமுவ மற்றும் மேற்கு மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். சில இடங்களில் 50 மில்லிமீட்டர் அளவுக்கு பலத்த மழை பெய்யும். வடமேல் மாகாணத்தில் பல இடங்களில் மழை பெய்யும். ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாலை அல்லது இரவில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை […]

You May Like

Breaking News

Translate »