இலுப்பூரில் எஸ்ஐ கையெழுத்தை போலியாக போட்டு போலி ஆவணம் தயாரித்ததாக அதிமுக வழக்கறிஞர் கைது


இலுப்பூர்: கோயம்புத்தூரை சேர்ந்த பெண், லோன் பெறுவதற்கு காணாமல் போன பத்திரத்தின் நகல் பெறுவதற்கு இலுப்பூரில் பத்திரம் காணாமல் போனதாக போலிசான்றிதழ் பெற்றது தொடர்பாக ஏற்கனவே 3 பேர் கைது செய்யப்பட்டு சில தினங்களுக்கு முன்பு இவர்கள் ஜாமினில் வந்தனர்.இந்நிலையில் இலுப்பூர் போலீசார் நேற்று இது தொடர்பாக அதிமுக வழக்கறிஞர் அணியை சேர்ந்த பாபு என்பவரை கைது செய்தனர். கோயமுத்தூர் மாவட்டம் குனியமுத்தூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் இருந்து இலுப்பூர் காவல் நிலையத்திற்கு பத்திரம் காணாமல் போனதாக வழங்கப்பட்ட சான்றிதழ் உண்மை தன்மை குறித்து விசாரணைக்கு வந்தனர்.

இதில் இலுப்பூர் காவல் நிலையத்தில் ஏற்கனவே எஸ்ஐ ஆக பணியாற்றியவாின் கையெழுத்து போட்டு போலியாக ஆவணம் தயாரித்தது தொிய வந்தது. இது தொடர்பாக கோயம்புத்தூர் தாமரை நகரை சேர்ந்த சங்கீதா. இதற்கு உடந்தையாக இருந்த குனியமுத்தூரை சேர்ந்த மனோகரன் மற்றும் பொியநாயக்கன் பட்டியை சேர்ந்த ராஜேந்திரன் ஆகிய 3 பேரை இலுப்பூர் போலீசார் கைது செய்திருந்தனர். இவர்கள் சில தினங்களுக்கு முன்பு ஜாமினில் வந்த நிலையில் நேற்று அதிமுக வழக்கறிஞர் அணியை சோ்ந்த பாபு என்பவரை இலுப்பூர் போலீசார் கைது செய்துள்ளனர்.Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர திட்டம்: கவுன்சில் கூட்டத்தில் ஆலோசிக்க வாய்ப்பு | GST Council may consider bringing petrol diesel under GST

Wed Sep 15 , 2021
புதுடெல்லி பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பெட்ரோலிய தயாரிப்புகளின் விற்பனையை சரக்கு, சேவை வரிநடைமுறையின் கீழ் கொண்டுவரவாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் வரும் வெள்ளிக்கிழமை நடக்க உள்ள ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இதுகுறித்து ஆலோசிக்கப்படும் என கூறப்படுகிறது. பெட்ரோலிய தயாரிப்புகளை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவர வேண்டும் என்று ஏற்கெனவே பலமுறை விவாதங்கள் எழுந்தன. அதேசமயம் சில மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் இதனால் தங்களின் வருவாய் குறையும் என்பதால் எதிர்ப்புகளையும் […]

You May Like

Breaking News

Translate »