அகற்­றப்­பட்­டது அந்­தோ­னி­யார் சிலை! பிள்ளையார் சிலையை மீள நிறுவ நடவடிக்கை! – உதயன்


அகற்­றப்­பட்­டது அந்­தோ­னி­யார் சிலை!
பிள்ளையார் சிலையை மீள நிறுவ நடவடிக்கை!

மன்­னார் மடு பகு­தி­யில், சுமார் 40 வரு­டங்­க­ளா­கக் காணப்­பட்ட பிள்­ளை­யார் சிலை, ஒரே இர­வில் சிதைக்­கப்­பட்டு, அச்த இடத்­தில் அந்­தோ­னி­யார் சிலை வைக்­கப்­பட்ட சம்­ப­வம் பெரும் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­திய நிலை­யில், அந்­தோ­னி­யார் சிலை நேற்று அகற்­றப்­பட்­டது. அந்த இடத்­தில் மீள­வும் பிள்­ளை­யார் சிலையை வைக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­கின்­றது என்று தெரி­விக்­கப்­பட்­டது.

மடு – பரப்­புக்­க­டந்­தான் வீதி­யில் மடு தேவா­ல­யத்­தி­லி­ருந்து 4 கிலோ­மீற்­றர் தூரத்­தில் அமைந்­தி­ருந்த பிள்­ளை­யார் சிலையே சிதைக்­கப்­பட்­டது.
அந்­தப்­ பிரதேசம் காட்­டுப்­ப­குதி என்­ப­தால் அந்­தப்­ப­கு­தி­யால் செல்­ப­வர்­கள் மத­வே­று­பா­டின்றி பிள்­ளை­யாரை வணங்­கி­விட்­டுச் செல்­வர் என்று பகுதி மக்­கள் கூறு­கின்­ற­னர்.
இந்­த­நி­லை­யில், அந்­தப் பகு­தி­யில் அமைந்­தி­ருந்த பிள்­ளை­யா­ருக்கு 4 வரு­டங்­க­ளுக்கு முன்­னர் சிறிய கோவில் ஒன்றை அமைப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்டு, முதற்­கட்­ட­மாக மூலஸ்­தா­னம் அமைக்­கப்­பட்டு பிள்­ளை­யார் எழுந்­த­ரு­ளி­யி­ருந்­தார்.
இந்­த­நி­லை­யில் அந்­தப் பிள்­ளை­யார் சிலையை விச­மி­கள் நேற்­று­முன்­தி­னம் அகற்­றி­விட்டு அந்­தோ­னி­யார் சிலையை வைத்­துள்­ள­னர்.

இந்­த­வி­ட­யத்தை அங்கு வாழும் இந்­து­மக்­கள் மற்­றும் இந்­துக் குருமார்கள் மன்­னார் மாவட்­டச் செ­ய­ல­ருக்கு முறை­யிட்­ட­னர்.
மன்­னார் மாவட்­டச் செ­ய­லர் ஏ.ஸ்ரான்லி டி .மெல், மடு பொலி­ஸார் மற்­றும் மடு பிர­தேச செய­லா­ளர் ஆகி­யோர் குறித்த பகு­திக்கு நேற்­று நேரில்சென்று பார்­வை­யிட்­ட­னர். அத்­து­டன் புதி­தாக வைக்­கப்­பட்ட அந்­தோ­னி­யார் சிலை அகற்­றப்­பட்டு மடு பொலிஸ் நிலை­யத்­துக்­குக் கொண்­டு­செல்­லப்­பட்­டது.
அந்த இடத்­தில் மீண்­டும் பிள்­ளை­யார் சிலையை அமைக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது. சிலை சிதைப்­புத் தொடர்­பாக மடு பொலி­ஸார் விசா­ர­ணை­களை மேற்­கொண்டு வரு­கின்­ற­னர்



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பூசா கோவிட் -19 இடைநிலை பராமரிப்பு மையம் வசதி மேம்பாட்டிற்கு நிதி உதவி பெறுகிறது

Wed Sep 15 , 2021
‘தஹம் பஹானா’ அறக்கட்டளை ரூ. பூசாவில் உள்ள கோவிட் -19 இடைநிலை பராமரிப்பு மையத்தில் கடற்படையின் உள்கட்டமைப்பை மேலும் விரிவுபடுத்துவதற்காக 2021 செப்டம்பர் 13 அன்று 01 மில்லியன் இலங்கை கடற்படைக்கு வழங்கப்பட்டது. இந்த இடைநிலை பராமரிப்பு மையம், கடற்படையால் பூசாவின் SLNS நிபுனாவில் நிறுவப்பட்டது. இது நிறுவப்பட்டதிலிருந்து, பல நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்கள் பரந்த அளவிலான பண மற்றும் பொருள் உதவியுடன் இந்த சரியான நேரத்தில் முன்முயற்சிக்கு பங்களித்துள்ளன. […]

You May Like

Breaking News

Translate »