கேஒய்சி படிவத்தில் கூடுதல் தகவல் கேட்டால் செல்போனில் விவரங்களைத் தர வேண்டாம்: பொதுமக்களுக்கு ரிசர்வ் வங்கி எச்சரிக்கை | reserve bank of india statement


செய்திப்பிரிவு

Published : 15 Sep 2021 03:10 am

Updated : 15 Sep 2021 04:56 am

 

Published : 15 Sep 2021 03:10 AM
Last Updated : 15 Sep 2021 04:56 AM

reserve-bank-of-india-statement

மும்பை

கேஒய்சி படிவத்தில் கூடுதல் தகவல் சேர்க்க வேண்டும் எனகோரிவரும் செல்போன் அழைப்புகளுக்கு பதில் தந்து ஏமாற வேண்டாம் என ரிசர்வ் வங்கி பொதுமக்களை எச்சரித்துள்ளது. இது தொடர்பாக விரிவான சுற்றறிக்கையையும் ஆர்பிஐ வெளியிட்டுள்ளது.

வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் அனைவரும் கேஒய்சிஎனப்படும் உங்கள் வாடிக்கையாளரை பற்றி தெரிந்துகொள் ளுங்கள் விண்ணப்பத்தை பூர்த்திசெய்ய வேண்டும். இது கணக்குவைத்திருக்கும் வங்கி வாடிக்கையாளரைப் பற்றிய முழு விவரமும் தங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும் என்பதற்காக கட்டாயமாக்கப் பட்டுள்ளது. .

வங்கி மோசடிகளில் ஈடுபடுவோர் வாடிக்கையாளர் மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டு வங்கியிலிருந்து பேசுவதாகக் கூறுகின்றனர். அத்துடன் வங்கிக் கணக்கில் அரசு சலுகைகள் கிடைக்க வேண்டுமாயின் குறிப்பாக சிலிண்டர் மானியம் உள்ளிட்ட சலுகைகள் கிடைக்க கேஒய்சி படிவத்தில் கூடுதல் விவரங்கள் சேர்க்க வேண்டியது அவசியம் என்றும் அதை உடனடியாக போனில் தெரிவித்தால் தாங்கள் சேர்த்து விடுவதாகக் கூறுகின்றனர்.

மோசடி அதிகரிப்பு

மறுமுனையில் இருக்கும் அப்பாவி வாடிக்கையாளரும் அனைத்து விவரங்களையும் அளித்து விடுகின்றனர். இதைப் பயன்படுத்தி வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில் இருந்துபணத்தை எடுத்து விடுகின்றனர். இதுபோன்ற மோசடிகள் அதிக ரித்து வந்துள்ளன.

இது குறித்து எச்சரிக்கும் விதமாக போனில் தகவல்களை தர வேண்டாம் என்று ரிசர்வ் வங்கி சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

அறிமுகம் இல்லாத நபரிடமிருந்து வரும் போனில் வங்கிக் கணக்கு தொடர்பான எந்த விவரத்தையும் அளிக்க வேண்டாம். அதேபோல இணையதளம் மூலம் வரும் மின்னஞ்சலுக்கும் பதில் தரவேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடவுச் சொல், வங்கிஅட்டை எண் போன்ற விவரங்களைத் தர வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்விதம் செல்போன் மூலமோ, மின்னஞ்சல் மூலமோ ஏமாற்று பேர்வழிகளுக்கு தகவல்கள் தந்தால் அவர்கள் வங்கிக்கணக்கில் உள்ள பணத்தை எடுத்துவிடுவர் என்றும் ஆர்பிஐஅறிக்கையில் சுட்டிக்காட்டப் பட்டுள்ளது.

டிசம்பர் 31 வரை கால அவகாசம்

அதேபோல எந்த வாடிக்கை யாளரின் கேஒய்சி படிவத்தில் விவரங்கள் இல்லை என்றாலும் அது தொடர்பாக அவர் வங்கிக்கு நேரில் வரும்போது வாங்கிக் கொள்ளுங்கள் என்றும் இதற்கு இந்த ஆண்டு டிசம்பர் 31 வரை கால அவகாசம் அளிக்கப்படுவதாகவும் வங்கி களுக்கு ஆர்பிஐ தெரிவித்துள்ளது. -பிடிஐ

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

டி 20 உலகக் கோப்பை தோல்வியின் அபாயகரமான அறிகுறிகள் - விளையாட்டு

Tue Sep 14 , 2021
ஆர். பிரேமதாசா ஸ்டேடியத்தில் ஷெஹான் டேனியல் டி 20 உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட அணியை இலங்கை அறிவித்த நாளில், அவர்கள் தங்கள் இரண்டாவது மோசமான டிவிடி போட்டியில் தென்னாப்பிரிக்காவிடம் ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தனர். இலங்கையின் ஒட்டுமொத்த 103 ஆல் -அவுட் என்பது, முதலில் தாயகத்தில் பேட்டிங் செய்த மிகக் குறைந்த ஸ்கோர் ஆகும், மேலும் தென்னாப்பிரிக்காவால் பந்துவீசப்பட்ட மிகக் குறைந்த ஸ்கோர் ஆகும். தென்னாப்பிரிக்காவுக்கு விக்கெட் […]

You May Like

Breaking News

Translate »