கோப்­பாய் பொலிஸ் பொறுப்­ப­தி­காரி பதவித் தரக்குறைப்புடன் இடமாற்றம்!


கோப்­பாய் பொலிஸ் பொறுப்­ப­தி­காரி
பதவித் தரக்குறைப்புடன் இடமாற்றம்!

கோப்­பாய் பொலிஸ் நிலை­யப் பொறுப்­ப­தி­காரி வீர­சிங்க, பத­வித்­த­ரம் குறைக்­கப்­பட்டு, களனி பொலிஸ் பிரி­வுக்கு இட­மாற்­றப்­பட்­டுள்­ளார்.
அவ­ரு­டைய வேலை­கள், நட­வ­டிக்­கை­க­ளில் திருப்தி இன்மை கார­ண­மாக உய­ர­தி­கா­ரி­க­ளால் வழங்­கப்­பட்ட முறைப்­பாட்­டுக்­க­மை­யவே கோப்­பாய் பொலிஸ் நிலை­யப் பொறுப்­ப­தி­காரி இட­மாற்­றப்­பட்­டுள்­ளார் என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

அவர் மீது தொடர்ச்­சி­யாக முன்­வைக்­கப்­பட்­டு­வந்த முறைப்­பா­டு­க­ளை­ய­டுத்து இந்த இட­மாற்­றம் பொலிஸ் உயர்­மட்­டத்­தி­ன­ரால் வழங்­கப்­பட்­டுள்­ளது என்று தெரி­விக்­கப்­பட்­டது.
அதன்­படி அவர், பொலிஸ் நிலை­யப் பொறுப்­ப­தி­காரி பதவி நிலை­யி­லி­ருந்து தர­மி­றக்­கப்­பட்டு ‘சூப்­பர் நியூ­ம­ரரி நிலை’ என்ற வகை­யில் களனி பொலிஸ் பிரி­வுக்கு இட­மாற்­றப்­பட்­டுள்­ளார்.
கோப்­பாய் பொலிஸ் நிலைய உத்­தி­யோ­கத்­தர்­க­ளின் அச்­சு­றுத்­தல், கையூட்­டுப் பெறல், முறைப்­பா­டு­களை தட்­டிக்­க­ழித்­தல் உள்­ளிட்ட நட­வ­டிக்­கை­கள் தொடர்­பில் முன்­வைக்­கப்­பட்­டு­வந்த குற்­றச்­சாட்­டுக்­களை வீர­சிங்க தட்­டிக்­க­ழித்து வந்­தார் என்ற குற்­றச்­சாட்­டுக்­க­ளும் உள்­ளன என்­றும் பொலி­ஸார் மேலும் தெரி­வித்­த­னர்.

The post கோப்­பாய் பொலிஸ் பொறுப்­ப­தி­காரி பதவித் தரக்குறைப்புடன் இடமாற்றம்! first appeared on உதயன் | UTHAYAN.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய இலங்கையருக்கு நியூசிலாந்து அகதி அந்தஸ்தை வழங்குகிறது ONLANKA செய்திகள்

Tue Sep 14 , 2021
ஈஸ்டர் குண்டுவெடிப்புக்குப் பின்னால் பயங்கரவாதிகளுக்குப் பணம் தெரியாமல் உதவிய இலங்கையருக்கு நியூசிலாந்து அகதி அந்தஸ்து வழங்கியுள்ளது, ரேடியோ நியூசிலாந்து தெரிவித்துள்ளது. நியூசிலாந்தில் உள்ள குடிவரவு மற்றும் பாதுகாப்பு தீர்ப்பாயம், அந்த நபர் பயங்கரவாத இலக்குகளை ஆதரிப்பதில் ஈடுபடவில்லை மற்றும் பணம் யாருக்கு சென்றது அல்லது எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை. வெளிநாட்டு மாமியார் மற்றும் வெளிநாட்டு தரகர் சம்பந்தப்பட்ட பண பரிமாற்ற திட்டத்தில் அவர் ஒரு மாதத்திற்கு பல பரிவர்த்தனைகளை […]

You May Like

Breaking News

Translate »