ஆட்சியாளர்களின் பிழையான நடவடிக்கையே ஐ.நா.மனித உரிமை ஆணையாளரின் குற்றச்சாட்டுக்கு காரணம் : ஐ.தே.க.குற்றச்சாட்டு


எம்.ஆர்.எம். வசீம்

நல்லாட்சி அரசாங்கம் மேற்கொண்டுவந்த மனிதநேய நடவடிக்கைகளை அரசாங்கம் கடைப்பிடிக்க தவறியுள்ளது.

ஆட்சியாளர்களின் மனிதாபிமானமற்ற நடவடிக்கையே ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் குற்றச்சாட்டுக்கு காரணமாகும்.

ஆட்சியாளர்களின் பிழையான நடவடிக்கையால் மக்களே பாதிக்கப்படுவார்கள். அதனால் மனித உரிமைகளை பாதுகாக்கும் வகையில் அரசாங்கம் செயற்படவேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பாக தெரிவித்திருந்த கருத்து தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியின் நிலைப்பாடு தொடர்பாக குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

2015க்கு முன்னர் மஹிந்த ராஜபக்ஷ் அரசாங்கத்தில் எமது நாட்டுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழு, ஐராேப்பிய ஒன்றியம் உட்பட மனித நேய இராஜ்ஜியங்களினால் பாரிய பிரச்சினை இருந்தது.

அதனால் மஹிந்த ராஜபக்ஷவும் தன்னை மின்சார கதிரையில் ஏற்றப்போவதாக பிரசாரம் செய்துவந்தார். அதனால் ஐராேப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி. வரிச் சலுகை நிறுத்தப்பட்டது.

சர்வதேச நாடுகளால் யுத்தக்குற்றத்துக்காக மஹிந்த ராஜபக்ஷ மற்றும் இராணுவத்தினருக்கு எதிராக பல எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டிருந்தன.

அதேபோல் பொலிஸ் தடுப்புக்காவலில் இருந்த நபர்கள் கொலைசெய்யப்பட்டுள்ளனர். அரசாங்கத்துக்கு எதிராக கருத்து தெரிவிக்கும் நபர்களை குற்றப்புலனாய்வு பிரிவுக்கு அழைத்து விசாரணை மேற்கொள்ளப்படுகின்றது.

உரிமைக்காக போராடிய ஆர்ப்பாட்டக்காரர்களை நீதிமன்றம் விடுவித்த பின்னரும் சட்டத்துக்கு முரணாக தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு கொண்டுசென்று துன்புறுத்தப்படுகின்றனர்.

இவ்வாறான காரணங்களால் மீண்டும் எமது நாட்டுக்கு எதிராக உலகில் பல்வேறு நாடுகள் எமக்கு எதிராக எதிர்ப்பை வெளிக்காட்ட ஆரம்பித்துள்ளன.

அதனால்  நாடு என்றவகையில், நாங்கள் ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டிருக்கின்றோம். அதனால் ஐக்கிய நாடுகளின் கோரிக்கைகளுக்கு கட்டுப்படுவதற்கு நாங்கள் கடமைப்பட்டிருக்கின்றோம்.

அதற்கு எதிராக செயற்பட்டு வரவதால்தான் ஐக்கிய நாடுகள் சபை உட்பட மனித நேயம் கொண்ட நாடுகள் எமது நாட்டுக்கு  எதிராக மீண்டும் நடவடிக்கை எடுப்பதற்கு ஆரம்பித்திருக்கின்றன.

ஆட்சியாளர்களின் பிழையான நடவடிக்கைகளே இதற்கான காரணமாகும். ஆட்சியாளர்களின் தவறான நடவடிக்கைகளால் நாட்டு மக்களே பாதிக்கப்படுகின்றனர்.

எனவே ஆட்சியாளர்களின் இதுபோன்ற  பிழையான நடவடிக்கைகளே ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் குற்றச்சாட்டுக்களுக்கு காரணமாகும். இந்த தவறுகளை ஆட்சியாளர் திருத்திக்கொள்ளாதவரை குற்றச்சாட்டுக்களில் இருந்து எமக்கு மீள முடியாது என்றார்.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

லசித் மலிங்கா கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார் ONLANKA செய்திகள்

Tue Sep 14 , 2021
இலங்கை வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா இன்று (செப்டம்பர் 14) அனைத்து விதமான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். “எனது டி 20 காலணிகளைத் தொங்கவிட்டு அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுகிறேன்! எனது பயணத்தில் எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி, வரும் ஆண்டுகளில் எனது அனுபவத்தை இளம் கிரிக்கெட் வீரர்களுடன் பகிர்ந்து கொள்ள காத்திருக்கிறேன் ”என்று அவர் ட்வீட் செய்துள்ளார். லசித் மலிங்கா 306 டெஸ்ட் போட்டிகள், 226 […]

You May Like

Breaking News

Translate »