சொத்து வரி பாக்கியை வசூலிக்க சென்ற மாநகராட்சி ஊழியரை தாக்கிய பெண்: போலீசார் விசாரணை


பெரம்பூர்: சென்னை மாநகராட்சி, திருவிக நகர் மண்டலம், 64வது வட்டத்தில் கோஜம் (38) என்பவர் வரி வசூல் பணியில் ஈடுபட்டு வருகிறார். இவர், நேற்று காலை கொளத்தூர் தென்பழனி நகரில் உள்ள மாணிக்கம் என்பவர் வீட்டிற்கு சென்று, கடந்த 10 வருடங்களாக சொத்து வரி செலுத்தாமல்  ரூ.8000 பாக்கி வைத்துள்ளீர்கள். அதை உடனே செலுத்த வேண்டும், என கூறியுள்ளார். இதற்கு, வீட்டில் இருந்த மாணிக்கத்தின் மனைவி சீதா, ‘எங்களிடம் பணம் இல்லை.  

சொத்து வரி கட்ட முடியாது,’ என்று கூறியுள்ளார். இதையடுத்து கோஜம், வரி பாக்கி நோட்டீசை மாணிக்கம் வீட்டு முன்பு ஒட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சீதா, தகாத வார்த்தைகளால் கோஜத்தை திட்டியதுடன், கையில் வைத்திருந்த பாத்திரத்தால் அவரை  சரமாரியாக தாக்கி உள்ளார்.  வீட்டு முன்பு ஒட்டிய நோட்டீசையும் கிழித்து எறிந்து உள்ளார். இதனால், அவருடன் இருந்த ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து ராஜமங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பிரதமர் மோடி உலகெங்கும் ஹிந்தியில் தான் பேசுகிறார்| Dinamalar

Tue Sep 14 , 2021
புதுடில்லி :’உலகெங்கும், பல்வேறு சர்வதேச அரங்கிலும் பிரதமர் நரேந்திர மோடி ஹிந்தியில் தான் பேசுகிறார். ஹிந்தியில் பேசுவதற்கு சங்கடப்படும், கூச்சப்படும் காலம் மலையேறிவிட்டது’ என, பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா கூறியுள்ளார். வாழ்த்து செய்தி ஹிந்தி தினத்தை முன்னிட்டு, சமூக வலை தளத்தில் நேற்று வாழ்த்து செய்தி பதிவிட்டுள்ளார் அமித் ஷா. அதில் அவர் கூறியுள்ளதாவது:’ஆத்மநிர்பர்’ எனப்படும் சுயசார்பு என்பது உள்நாட்டிலேயே பொருட்களை உற்பத்தி […]

You May Like

Breaking News

Translate »