குஜராத் அமைச்சரவை இரண்டு நாளில் முடிவு| Dinamalar


ஆமதாபாத்:’குஜராத்தில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா அடுத்த இரண்டு நாட்களில் நடைபெறும்’ என, பா.ஜ., தெரிவித்துள்ளது.

குஜராத் முதல்வராக இருந்த பா.ஜ.,வின் விஜய் ரூபானி சமீபத்தில் தன் பதவியை ராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்து, முதல் முறை எம்.எல்.ஏ.,வான பூபேந்திர படேல் முதல்வராக நேற்று முன்தினம் பதவியேற்றார்.ஆனால், அமைச்சர்கள் யாரும் அவருடன் பதவியேற்க வில்லை.

‘யார் யாருக்கு அமைச்சர் பதவி என்பது குறித்து ஆலோசனை நடத்தி முடிவு செய்யப்படும்’ என, கட்சியின் மூத்த தலைவர்கள் தெரிவித்திருந்தனர்.”அமைச்சர்களை தேர்வு செய்வதற்கான ஆலோசனைகள் நடந்து வருகின்றன. அடுத்த இரண்டு நாட்களில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா நடைபெறும்,” என, குஜராத் பா.ஜ., செய்தித் தொடர்பாளர் யாமல் வியாஸ் தெரிவித்துள்ளார்.

Advertisement



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Trishna Mukherjee

Tue Sep 14 , 2021
Trishna Mukherjee actress images from IndiaGlitz.com telugu Source link

You May Like

Breaking News

Translate »